பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




யாழ் நங்கை

(273

தந்தையாயிற்று. தாயும் அவளை நெடுநாள் இருந்து பேணவில்லை.அவளுக்கு மலையே தாயாய் இருந்தது.அத்துடன் இயல்பாக உறவினரின் பாசத்துக்கோ, கட்டுக்கோ அவள் ஆட்படவில்லை. மலையில் திரிந்த மான்களும், மயில்களும், குயில்களுமே அவளுக்கு உறவுகளாயிருந்தன. மான்களிடையே ஒரு தோகை மயிலாக, குயில்களிடையே ஒரு இசைக் குயிலாக அவள் ஓடியாடிப் பாடித் திரிந்தாள்.

மேகம்போல் அலையாடிய அவள் மென் கூந்தலில் வானத்தின் நீல நிறம் படிந்திருந்தது. அதே நீல நிறம் அவள் நீண்டகன்ற கருவிழிகளில் செறிவுற்றும், அவள் நாடி நரம்புகளில் நெகிழ்வுற்றும் பரந்தோடிற்று. மலைப் பிளவுகளில் நிலவை உண்டு வளர்ந்த சந்தனமரக் கட்டைகளின் சாயல் அவள் உடல் சாயலாயமைந்தது. மெல்லிய வெள்ளி பொன் தகடுகளினூடாக ஒளி வீசும் முத்துப் பவளச் சிலை போல் அவள் காட்சி யளித்தாள். முயலின் செங்குருதியைக் குடித்து அதில் அவள் அளைந்ததின் அடையாளமோ என்று கருதும்படி செவ்வரக்கு நிறம் அவள் வாயிதழ்களிலும், உள்ளங்கை, உள்ளங் கால்களிலும், நகங்களிலும் தோய்ந்து, நாடி நரம்புகளில் பின்னிப் படர்ந் திருந்தது. வான ஒளியும் மலை நிழலும் சேர்ந்து சேலமலைப் பக்கங்கள் உருவாக்கிக் காட்டும் கொல்லிமலைப் பாவையோ என்னும்படி அவள் எழிலரசியாய்க் காட்சியளித்தாள்.

அவள் ஓடியாடிய மலைகளும் காடுகளும் திடீரென ஒருநாள் மையூர்கிழான் மலைப்படைகளின் வேட்டைக் களங்களாயமைந்தன. அதன் பயனாக மலையரையர் செல்வங்கள் யாவும் சேரப் பேரரசன் திறைப் பொருள்கள் ஆயின. திறைப் பொருளுடன் திறைப் பொருளாக நீலமணியும் பேரரசன் அவைக்குக் கொண்டு வரப்பட்டாள். அத்திறைப் பொருள்களி லிருந்து மையூர்கிழானுக்கு அள்ளி வழங்கப்பெற்ற பரிசுப் பொருள்களிடையிலும் அவள் ஒரு பரிசுப் பொருளானாள்.

அச்சமயம் அவளுக்கு வயது பன்னிரண்டு. பருவ மெய்தாத விளையாட்டுச் சிறுமியாகவே அவள் காட்சியளித்தாள். ஆனால் மையூர்கிழானோ ஏற்கெனவே நாற்பதும் ஐந்தும் சென்று, இளமைப் பருவமும் நடு வயதும் கடந்து, முதுமையின் வாயிற்படியை எட்டிப் பிடித்திருந்தான். அவன் வீரம் மறைந்து