பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 28

(274) ||. விடவில்லையாயினும், அது காதலாக மலராமலே அறிவின்பால் முதிர்ந்து, சமய ஞானமாகக் கனிவுற்றிருந்தது. அவன் பேரவாக்கள் இப்போது போர்க்கள வெற்றிகளும் ஆட்சிப் புகழும் கடந்து ஐந்தடக்க வெற்றியிலும் பிரமச்சரியத்திலுமே பதிந்திருந்தன. அவற்றுக்கான ஆராய்ச்சிகளிலும் பயிற்சிகளிலுமே அவன் ஆர்வமுடன் ஈடுபட்டிருந்தான். ஆனால் இந்நிலையிலும் எப்படியோ சிறுமி நீலமணியின் வடிவழகும் குறும்பு நடையும் கலகலப்பும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன.

-

பறந்து திரியும் பறவைகளுடன் தாமும் பறந்து திரிந்து மகிழ முடியாத மாந்தர், அவற்றைக் கூண்டில் அடைத்து வைத்து மகிழ்கின்றார்களன்றோ? அதுபோல இளமையுணர்ச்சியிலும் இன்பத்திலும் மிதக்க முடியாத மிதக்க எண்ணாத அவன், அவற்றில் மிதக்க இருந்த அந்த முதிரா இளமையைத் தனதாக்கிக் கூண்டிலடைத்து வைத்து மகிழ எண்ணினான். அவன் குறிப்பறிந்த பேரரசன், அவளை அவனுக்கே மண உறுதி செய்து வைத்தான்.

சிறு வீடு கட்டி வாழும் வாழ்க்கையன்றி வேறு வீட்டு வாழ்க்கை யறியாத அந்நங்கை ஒரு மாளிகைச் செல்வனின் மனையாட்டி ஆயினாள்.

காதலைத் துறந்து தவ வாழ்வு மேற்கொண்ட துறவிகள் உண்டு. தவ வாழ்வு மேற்கொண்டு காதலில் சறுக்கி விழுந்து, விசுவாமித்திரர் போல அவதியுற்ற வீரத் துறவிகள் கூட உண்டு. ஆனால் மையூர்கிழான் இவ்விருவகைகளிலும் சேர்ந்தவனல்ல. அவன் காதலில் சறுக்கவில்லை; காதலில் மிதக்க விரும்பவு மில்லை. தவ வாழ்விலேயே கடு நீச்சல் நீந்திச் செல்ல விரும்பினான். அந் நீச்சலிடையே ஆங்காங்கே காலூன்றிக் கொள்ளும் இடமாகவே, காதலைக் கருதினான். அதற்காக ஓர் இள நங்கையின் அழகையும் இளமையையும் பாழாக்குகிறோமே என்ற எண்ணம் தன்னலம் மறவாத அந்தத் துறவிக்கு ஏற்பட வில்லை. தனக்கு வேண்டாத ஒன்றைப் பிறருக்கு இல்லாத தாக்குவதே தனதாக ஆக்குவதென்று அவன் கருதினான்.

நீலமணி வளர வளர, அவள் அழகு கண்கொள்ளா எழிலொளியாக வளர்ச்சியுற்றது. தனக்கெனக் கட்டிக் காக்கும் அந்த அழகை வேறு எவரும் காண மையூர் கிழான் பொறுப்ப