பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




யாழ் நங்கை

(277

முடியாத ஏமாற்ற நிலை புனைமாண்குடுமியின் வகையில் காணும் ஆர்வத்தைப் பன்மடங்கு வளர்த்ததே தவிர, சிறிதும் தளர்த்திவிடவில்லை. அவள் போக்கு வரவுகள் பற்றியும், சூழல்கள் பற்றியும் உளவறிந்து, அம்மாளிகையையே நிழல் போலச் சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.

ஆண்டுகள் ஒன்றிரண்டு சென்றன. நீலமணி, கொடு மணவல்லியையும் ஒரு சில பாங்கியரையும் தவிர, வேறு வெளியார் எவரையும் பார்க்கவில்லை. பார்க்க முனையவு மில்லை. யாரும் தன்னைக் காண விரும்புவதாகவோ கண்ட தாகவோ கூட அவளுக்குத் தெரியாது. ஆயினும் விடா முயற்சியின் பயனாகப் புனைமாண்குடுமி தொலைவிலிருந்தும், ஓரளவு அருகில் ஒதுங்கி நின்றும், பல இடங்களில் பதுங்கிப் பல கோணங்களிலிருந்தும் அவள் அழகை அடிக்கடி அள்ளி அள்ளிப் பருகியிருந்தான். நல்ல காலமாக ஒரு தடவைகூட அவனை அச்செயலில் எவரும் காணவில்லை. கண்டிருந்தால் அவனது ஒரு திசைக் காதல் அந்த ஒரு திசையில்கூட இல்லாமல் அழிக்கப்பட்டே விட்டிருக்கும்.

நீலமணியைக் காணப் புனைமாண்குடுமி எடுத்துக் கொண்ட அருமுயற்சிகள் ஒன்றல்ல; பல; ஒரு வகையிலல்ல; பல வகையில். அவன் இயல்பான கட்டமைந்த உடல் உடையவன். அதைப் பயன்படுத்தி அடிக்கடி பெண் வேடத்தில் உலவினான். பூ தேவையாக இருந்த காலத்தில் பூ வாணிச்சியாகவும், வெற்றிலைப் பழங்கள் தேவையான காலத்தில் அத்தகைய பொருள் விற்கும் பெண்டிராகவும் உருக்கொண்டு சென்றான். நீலமணியின் பேரழகைக் காணும் தோறும் பரிவு அடக்க முடியாக் காதலாயிற்று. சூது வாதறியா அந்தப் பெண்ணை ஒரு கொடுங்கோலன் சிறைப்படுத்தி ஆட்கொள்வதா என்ற கடுஞ் சினம் அவனுக்கு ஏற்பட்டது. எப்படியாவது அவளைச் சிறைக் கடத்தி, மையூர்கிழானின் தொடர்பறுத்து, அவளைத் தானே பெறுவதென்று அவன் திட்டமிட்டான். அவனிடம் உயிரே வைத்திருந்த அத்தையான காதம்பரியிடமும் அவன் பக்குவமாக யாவும் கூறி அவள் ஒத்துழைப்பையும் ஒருவாறு பெற்றான். ஆனால் இருவர் ஒன்றுபட்ட முயற்சியால்கூட, அவளைக் காணவும் போக்கு வரவுகள் அறியவும் முடிந்ததேயன்றி, அவளுடன் பேசவோ, அவள் உள்ளம் அறியவோ முடியவில்லை.