பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(280) ||

66

அப்பாத்துரையம் - 28

நீலமணி நிலைக் கண்ணாடியின் முன்னரே கவலையுடன் நிற்பதைக் குறப்பெண் கண்டாள். அவள் கண்களில் நீலமணி தனியாய் இருப்பதாகவே தோன்றிற்று. அவள் மெல்ல உள்ளே சென்று நீலமணியைப் புகழ்ந்து பேசினாள். பேச்சினிடையே, 'கண்ணாடியில் நிழலுருவாக நீ கண்ட இளைஞன் கொடுத்த கடிதம் இது” என்று கூறி முடங்கலை நீட்டினாள். மற்ற எந்தச் சமயத்திலும் நீலமணி இத்தகைய எதையும் கை நீட்டி வாங்கியிருக்க மாட்டாள். ஆனால் அன்று ஏற்கனவே கண்ணாடியின் நிழலுரு அவள் உள்ளத்தில் தோன்றி அவளைக் குழப்பம் அடையச் செய்திருந்தது. அவள் இன்னது செய்கிறோம் என்று அறியாமல் முடங்கலைக் கையில் வாங்கி, அதனுடன் விளையாடிக் கொண்டிருந்து விட்டாள்.

அருகேயிருந்த மற்றொரு நிலைக் கண்ணாடியின் முன் தான் மையூர்கிழான் ஆடை திருத்திக் கொண்டிருந்தான். குறப்பெண் கூறிய சொற்கள் கூரிய ஈட்டி போல அவன் செவிகளில் பாய்ந்தன. நீலமணி முடங்கலைக் கைப்பற்றி துணிவுடன் அதை வைத்து விளையாடுவது கண்டதும் அவன் சீற்றம் பெரிதாயிற்று. உடல் தளர்வுற்ற பின் முதல் தடவையாக அவன் பழைய வீரத் துடிப்பு அவனை உள் நின்று தூண்டிற்று. அவன் சரேலென வந்து நீலமணியை எட்டி உதைத்தான். செய்தி இன்னதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த குறப்பெண்ணைப் பிடித்தாட்டிக்கழுத்தை நெரித்தான். அவள் வீறிட்டுக் கதறக்கூட நேரமில்லாமல் அப் பிடியில் குற்றுயிராய் உணர்விழந்தாள். அவள் உயிரிழந்துவிட்டாள் என்ற எண்ணத்துடன் மையூர்கிழான் ஒரு சிறிது கோபம் மாறி, நீலமணியிடமிருந்து பறித்த முடங்கலுடன் தன்னறை சென்றான்.

முடங்கலை வாசித்ததும் மையூர்கிழானிடம் பாதி ஆறியிருந்த கோபம் மறுபடியும் பன்மடங்காகச் சீறி எழுந்தது.

"மலையிடையே பிறந்த அழகு மாணிக்கமே! ஆண்டுக் கணக்காக உன் பொன்னெழில் என்னை வாட்டுகிறது. கண்ணாடியில் உன் புற அழகை மட்டுமன்றி அகத் துயரும் நன்கு அறிந்தேன். அதுநாள் முதல் உன்னைச் சிறைப்படுத்தி வைத்துள்ள “பூதத்”திடமிருந்து உன்னை விடுவிக்க அரும்பாடு பட்டு வருகிறேன். அந்நாள் விரைவில் வரும். அதுவரை ஆற்றியிரு.