பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

13

வணிகன், தனக்கு மணமோ மனைவியோ எதுவும் இல்லையென்றும், அவர்கள் முன் வாதாடுவது, பெண் அல்ல; பெண் உருவெடுத்துள்ள மாயப் பேயே என்றும் எவ்வளவோ எடுத்துரைத்தும், வேளாளர் அவனைச் சற்றும் நம்பாது அவளை ஏற்க வற்புறுத்தியதுடன், அவள் அச்சந்தவிர்க்கும்படி அவனுக்குத் தீங்குவராமல் உயிர் தந்தும் காப்பதாகக் கூறினர். நீலி பிள்ளையுடன் வணிகனோடு தங்கினாள். அப்போதும் அவனுடைய வாள், அவள் பழிக்குத் தடங்கல் செய்தது. அவனிடம் இருக்கும் வாள் கண்டுதான் அஞ்சுவதாக நடித்து, வேளாளர் மூலம் அதையும் அவள் அகற்றினாள். அதன் பின் அவள், இரவில் வணிகனுடைய உடலைப் பிளந்து குருதி உண்டு, பழி தீர்த்துப் பழையபடிபேயாகச் சென்றுவிட்டாள். இச்செய்திகேட்ட வேளாளர், தம் தவற்றை உணர்ந்து வருந்தித் தம் உறுதி மொழி தவறாது தீக்குளித்திறந்தனர்.

தி

சேக்கிழார் புராணத்திலும், தலபுராணத்திலும், நீலகேசி காவியத்திலுள்ளது போலவே, பழையனூர், நீலிப்பேய் என்ற பெயர் ஒற்றுமைகள் காணப்படினும், சேக்கிழார் புராணத்து நீலி காளியல்லள். மனித ஆவிவடிவான பேயே. எனவே, சேக்கிழார் புராணக் கதையைவிடத் தலபுராணக் கதையே நீலகேசி காவியத்துடன் மிகுதியும் ஒற்றுமை உடையது.

சமணர் இல்லற வாழ்க்கை மறைபற்றிக் கூறும் சமந்த பத்திர அடிகளின் (சுவாமி சமந்தபத்திரரின்) இரத்தினக் கண்டகம் என்ற நூலின் உரையில் இவற்றினும் வேறுபட்ட இன்னொரு பழையனூர் நீலிக்கதை தரப்படுகிறது.இந்நூலில் இல்லறத்துக்குரிய கற்பு (பிரமசரிய) நெறிகாத்துப் புகழ் பெற்ற நங்கையர்க்கு எடுத்துக் காட்டாகப் பழையனூர் நீலியின் பெயர் குறிப்பிடப்டுகிறது. உரையாசிரியர் கதையை விரிவாகக் கூறுகிறார். அதன்படி நீலி, வசபால மன்னன் ஆட்சிக்குரிய வடநாட்டின் தலைநகரான பிருகு கச்சத்தில் வாழ்ந்த ஜினதத்தன் என்ற வணிகன் மகள். அவள் ஒப்புயர்வற்ற அழகு வாய்ந்தவள். அதே நகரில் சமுத்திரதத்தன் என்ற வணிகனுக்கும் அவன் மனைவி சகரதத்தைக்கும் பிள்ளையான சாகர தத்தன் என்பவன் அவள்மீது காதல் கொண்டான். அனால் சாகரதத்தன் புத்தர்