பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(286

||-

அப்பாத்துரையம் - 28

ஆதிக்கம் பெரிதாயிருந்த காலத்தில், அவன் முன்னோர்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். இதனால் அவன் பெயரும் போர்ச்சுகீசியப் பெயராய் அமைந்திருந்தது. கல்லூரி திறக்கும் சமயம், தன் பிறப்பிடமாகிய கரமனையிலிருந்து புறப்பட்ட மருதவாணன், தன் நண்பன் அழைப்பை ஏற்று, அங்கே ஒன்றிரண்டு நாள் தங்க ஒத்துக்கொண்டிருந்தான். ஒத்துக் கொள்ளும்போது நண்பனை மட்டுமே எண்ணியிருந்தான். அவன் ஊரின் அழகு பற்றி எண்ணவில்லை. ஆகவே இப்போது ஒத்துக்கொண்டது பற்றிப் பெருமகிழ்ச்சியடைந்தான்.

காண்பதற்கு மலைமேலுள்ள ஊர் களிப்பைத் தந்தாலும், அவ்வளவு உயரம் வளைந்து வளைந்து செல்லும் ஒடுங்கிய பாதையைக் கண்டபோது அவன் இதில் எப்படி ஏறிச் செல்வது என்று மலைப்பே அடைந்தான். ஆனால் அதை எதிர்பார்த்தவன் போலச் செபசித்தியோன் அடிவாரத்தருகில் ஒருசிறு கட்டை வண்டியுடன் காத்திருந்தான்.

மருதவாணனை மட்டுமின்றி, அவன் பழக்கவழக்கங்கள், விருப்பு வெறுப்புகளைக்கூட செபசித்தியோன் பெற்றோர் அறிந்திருந்தனர். அவனுக்குப் பிடித்தமான பொருள்கள் தேர்ந்தெடுத்துச் சித்தம் செய்யப்பட்டிருந்தன. அவன் தன் வீட்டில் தங்குவது போலவே, இயல்பாக அங்கே பழகித் தங்கினான்.

கீழிருந்து பார்க்கும்போது மலை ஒரே மலையாகத் தோன்றினாலும், மேலே செல்லச் செல்ல, சிறிதும் பெரிதுமாக முன்பின்னாகப் பல முகடுகளும், அகன்ற பள்ளத்தாக்குகளும், மேடு பள்ளங்களும் இருந்தன. எல்லா இடங்களையும் நன்கு கண்டு பழகிய செபசித்தியோன், அவனை அதன் தொலை யிடங்கள், உள்ளிடங்களுக்கெல்லாம் இட்டுச் சென்று காட்டினான். பாழடைந்த பண்டைக்காலப் புத்த, சமணப் பள்ளிகளின் தடங்கள் ஆங்காங்கே தெரிந்தன. ஆனால் போர்ச்சுகீசியர் காலத்துக் கோயில்களும், மடங்களும், கட்டிடங்களும், ஆதிக்கமிழந்த போர்ச்சுகீசிய வெள்ளையர் வாழ்ந்த குடியிருப்புகளும் கிட்டத்தட்ட நல்ல நிலையிலேயே இருந்தன. தம் ஆட்சி ஆதிக்கம் குறைந்த பின்னும் தம் உயர்வு மனப்பான்மையையும், அதற்குரிய மெருகு மினுக்குகளையும்