(288
நண்பனின் திடீர் முடிவு,
அப்பாத்துரையம் - 28
செபசித்தியோனுக்கு
வியப்பளித்தது.“என்ன இந்த இடத்தில் இப்படித்திடீர்க் காதல்?”
என்றான்.
மருதவாணன் உண்மையில் ஒரு புத்தகப் புழுவாய்க் காலம் கழித்தவன். மாணவரிடையேகூடக் கலகலப்பாகப் பழகுபவன் அல்ல. ஆனால் செபசித்தியோனோ கோட்டாற்றுக் கடை வீதியாகிய கம்பள முதல் கால்வாய்க் கரைவரை எல்லா இடத்திலும், எல்லா வகையினருடனும் ஆரவாரமாகப் பழகி ஆர்ப்பரிப்பவன். மருதவாணனின் புத்தார்வம் செபசித்தி யோனுக்கு வியப்பளித்ததற்கு இதுவே காரணம். ஆனால் தற்காலிகமாக மருதவாணன் அதற்கு ஒரு விளக்கம் தந்தான்.
66
'அதோ பார், செபாசு! அந்த மலை முக்கு யானையின் துதிக்கை போல எவ்வளவு சொகுசாக வளைந்திருக்கிறது! அதன் மீது இந்த நண்பகலில் பறவைகள் பறப்பது எவ்வளவோ ஒய்யாரமாய் இருக்கிறது! காலையில், மாலையில் அல்லது நிலவில் பார்த்தால் என்ன அலங்காரக் காட்சியாய் இராது!" என்றான் அவன்.
“சரி சரி, நண்பகல் காட்சி போதாது. காலை, மாலை, நிலவுக் காட்சியெல்லாம் வேண்டுமா? ஏது, இங்கே வாரக் கணக்கில் தாவளமடிக்க எண்ணம்போலிருக்கிறதே!" என்றான்.
மடத் தலைவர் இங்கே தலையிட்டார்.மருதவாணன் திடீர் மாற்றத்தில், பிரம பிதாவின் செயலை ஒருவேளை அவர் கண்டாரோ என்னவோ - அவர் அவன் ஆர்வத்தை உள்ளார் வத்துடன் ஆதரித்தார்.
66
"தம்பி கூறுவது சரிதான். வேளைக்கொரு அழகை அக்குவட்டில் நானே பார்த்திருக்கிறேன். ஏன், இருவரும் ஒரு வாரம்தான் தங்கிப் போவதுதானே! அடைத்துக் கிடக்கும் நல்ல அறைகளில் ஒன்றின் திறவுகோலைத் தருகிறேன். அறை, விருந்தினர் அறைதான். எல்லா வாய்ப்புகளும் உண்டு. விருந்தாளிகளுக்குத்தான் இங்கே பஞ்சம்! இருவரும் தாராளமாக இங்கே தங்கிப் படித்துப் பொழுது போக்கலாம்!” என்றார்.
செபசித்தியோன் மருதவாணன் முகம் நோக்கினான். மறுகணம் இணங்கினான்.