பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




யாழ் நங்கை

[289

"பேருக்குத்தான் இப்போது கல்லூரி திறக்கிறார்கள். அடுத்து விரைந்து ஓணஓய்வு மீண்டும் வருகிறது; அதன் பின்னால் போனால் போகிறது. அம்மா அப்பாவிற்கு என்னை விரைவில் அனுப்ப மனம் வந்தாலும் வரும். உன்னை அவ்வளவு விரைவில் அனுப்ப மனமில்லை. ஒரு வாரமல்ல, ஒரு மாதம் இருந்து போவோம் கோட்டாற்றுக்கு" என்றான் அவனும்.

செபசித்தியோன் தங்க எண்ணியது தன் வீட்டில்தான். ஒருநாள் இரண்டு நாட்களுக்குள் தன் வீடு செல்ல அவன் எண்ணினான். ஆனால் மருதவாணன் டையிடையே செபசித்தியோனின் வீட்டுக்கு வந்து, வாரக் கணக்கில் மடத்தலைவர் தந்த அறையிலேயே தங்க விரும்பினான். செபசித்தியோன் இதற்கு இணங்கினான்.

66

நண்பன் வாழ்வில் ஏதோ மாறுதல் வந்திருக்கிறது. இன்னதென்று அறிய முடியவில்லையே!” என்று செபசித்தியோன் சில சமயம் நினைப்பான். ஆனால் அவன் தாய் அவன் கவலை கண்டு புன்முறுவல் பூத்தாள். “நீ அவனை மலைக்கு அழைத்து வந்தாய். 'பரம பிதா'..” என்று தொடங்கினாள். அவன் இடைமறித்து, "போதும்; அம்மா போதும்! மடத் தலைவருக்கு நீ தங்கையாகப் பிறந்திருக்க வேண்டும்” என்றான்.

.

"உன்னைப்போல எல்லாச் சிறுவரும் சந்தைக் கடையைக் கிளறிக் கொண்டிருக்க மாட்டார்கள். தெய்வ பக்தியுள்ள இளைஞர் இல்லாமல் போகவில்லை. மருதனைப் பார்த்தாலே தெரிகிறதே!” என்று தந்தை வேறு திருவிளக்கம் தந்தார்.

மருதவாணன் உள்ளத்தில் ஏற்பட்ட மாறுதல் என்ன வென்பது அவனுக்குத் தெரியாது. அவன் படிப்பில் என்றுமில்லா அக்கறை காட்டிப் பழம் பாடங்களை ஒன்று விடாமல் திருப்பித் திருப்பிப் பக்கம் பக்கமாகப் புரட்டினான். இதற்கிடையே மடத் தலைவர் அன்றாடம் 'கன்னி மரியா', 'திருநிறை தாய்’, ‘குழந்தை இயேசு', 'இயேசுவும் ஆட்டுக்குட்டியும்' என்ற தலைப்புக் களுடைய அழகிய வண்ணப் படங்கள், சிற்றேடுகள் கொண்டு வந்து அறையை நிரப்பியிருந்தார். ஆனால் மருதவாணன் கண்கள், இவற்றிலெல்லாம் சுற்றிப் பார்த்து அலுப்புற்ற பின் மலை முகட்டைப் பார்க்கும். மலை முகட்டிலிருந்து கண்கள் அந்த