பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(290)

||.

-

அப்பாத்துரையம் - 28

வெள்ளையர் மாளிகையில் இறங்கும். அதன் திசைகளில் பதியும் மலை முகட்டில் நாளொரு வண்ணமும் பொழுதொரு வடிவமும் மாறிற்றோ, என்னவோ அந்தத் திரையில் நாளுக்கொரு பூவேலைச் சித்திரம் மாறுவது தவறுவதில்லை. அது தொழிலாளர் பூவேலையல்ல. வீட்டில் யாரோ கலையுணர்ச்சியும், பயிற்சியும் உடையவர் பெரும்பாலும் ஒரு இள நங்கையின் - பூ வேலையே என்பதை இது காட்டிற்று.புறக்கண்கள் அப் பூவேலையில் படிந்த அதே நேரத்தில் அக்கண்கள் அதைப் புனைந்த இள நங்கையின் கற்பனை உருவைச் சுற்றி நிழலாடின.

இரவில் பல தடவை, சில சமயம் எவரும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவில், அவன் இனிய யாழின் இசையை - மனமுருக்கும் சோகமுடைய காதல் கீதத்தைக் கேட்பான். பகலில் அவன் கண்ட திரையின் பின்னிருந்தே, அந்த இசையும் வருவதாக அவனுக்குத் தோன்றிற்று. பூவேலையில் ஈடுபட்ட அதே கைகள், யாழையும் மீட்டியிருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். கண்வழி ஓவியக் கலையில் இன்பமும், செவிவழி இசைக் கலையில் இனிமையும் ஒருங்கே அளிக்கவல்ல அம் மெல்விரல்கள், காதல் இசை மீட்டினால் எப்படி இருக்குமோ?... இப்படி அவனால் எண்ணாமலிருக்க முடியவில்லை!

அந்த மாளிகையின் புறஅமைப்பு முழுவதும், பகலும், இரவும் பல கோணங்களிலிருந்து பார்த்துப் பார்த்து மருதவாணனுக்கு மனப்பாடமாகி விட்டது. அதன் உள் அமைப்பு எப்படி இருக்குமோ, அதன் உள்ளே யார் யார் இருப்பார்களோ.. இதுமட்டுமே அவனுக்குத் தெரியாது. எந்த நேரத்திலும், எவரும் உள்ளே போகவோ வெளியே வரவோ இல்லை என்பதை மட்டும் அவன் உன்னிப்பாகக் கண்டறிந்து கொண்டான். இதனால் மாளிகையில் ஆடவர் இல்லை என்றும், மாளிகைவாசிகள் வாழ்க்கைப் படியில் நல்ல செல்வாக்கான நிலையிலே உள்ளவர்களே என்றும் அவனால் ஊகிக்க முடிந்தது.

அவன் ஊக்கம் சரி என்பதைப் பின் வந்த நிகழ்ச்சிகள் விரைவில் காட்டின.

கல்லூரி வாழ்விலோ, நேரிடையிலோ குடும்பம், சமுதாயம், பெண்டிர் முதலிய பேச்சுக்களில் என்றும் கலக்காதவன் மருதவாணன்.