பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(292)

|–

அப்பாத்துரையம் - 28

மருதவாணன் தற்செயலாக மடத்துக்கு வந்தபோது இந்தக்

காட்சியைக் கண்டான்.

ஒரு விநாடியில் அவன் உள்ளம் உருகிற்று. ஆனால், அதே சமயம் அவன் தோற்றம் காப்புறுதியளிக்கும் வீர காவலனின் வீறும், அமைதியும் உடையதாயிற்று. "நீங்கள் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. எத்தனைபேர் வந்தாலும் நான் உயிர் கொடுத்து உங்களைக் காக்கிறேன்" என்று கூறினான்.

மாளிகை வாசிகள் மூன்று பெண்டிர். சற்று முதுமை எல்லையடைந்த நிலையில் ஒருத்தி, ஓர் அழகு இள நங்கை, மூன்றாவது ஓர் இளம் பெண் ஆகியோர். மூன்றாவது பெண் நின்ற நிலையிலிருந்தே, அவள் ஒரு பணிப் பெண் என்று தெரிந்தது. அழகு கொழிக்கும் இளம் பருவ நங்கையே இசைக்கும் பூவேலைக்கும் உரியவளாய் இருக்க வேண்டுமென்று

பூ

மருதவாணன் மதித்தான். அவனது நம்பிக்கையூட்டும் அந்த ஆதரவு கேட்டு அவர்கள் முகங்கள் மலர்ந்தன. தாய் அவனுக்கு வாயார நன்றி தெரிவித்தாள். ஆனால் முகபாவத்தில் மூவருமே தனித்தனியாக நன்றி கூறுவது போலிருந்தது. இள நங்கை ஆர்வமும், துடிப்பும் மிக்கவளாகவே இருந்தாள். அவள் கண்கள் மீண்டும் நன்றியறிவிப்பை நகை ஒளியாகத் தெரிவித்த வண்ணம் இருந்தன. வாயிதழ்கள் அதை அடிக்கடி முணுமுணுத்துக்

காண்டன.

அச்சத்தாலும், கிலியாலும் இள நங்கையின் அழகு, அவர்கள் முன்னே பன்மடங்கு முனைப்பாகக் காட்சியளித்தது. அவள் வெள்ளையர்களிடையே கூடக் காணுவதற்கரிய செம்பொன் வண்ணமுடையவளாய் இருந்தாள். சுண்டினால் குருதி கொட்டிவிடுமோ என்னும்படி செங்கழுநீர்ச் சிவப்பேறிய அவ்வுடலழகை, அவள் மெல்லிய பொன்னிற அங்கி பெரிதும் எடுத்துக் காட்டிற்று. இளமையின் தளதளப்பு மட்டுமின்றித் துடிப்பும் உறுப்பு உறுப்பாகத் தெரிந்த வண்ணம் இருந்தன. கண்கள் இயல்பாகவே நீண்டகன்றவை - விழியுடன் கருநீலமாக மின்னின. அவை இமைக்கும் தோறும் மருதவாணன் உள்ளத்தைச் சென்று வெட்டுபவை போலிருந்தன. அவள் அழகு காண்பார்க்கு இன்பத்தைவிடத் துன்பத்தையே மிகவும் தூண்டிற்று. மருதவாணன் போல பெண்டிரிடம் மிகுதி