பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(14) ||-.

அப்பாத்துரையம் - 28

குடியினனாதலால் நீலியின் பெற்றோர் அவனுக்கு அவளைத்தர மறுத்தனர். சாகரதத்தனோ நீலியையன்றி, வேறொருவரையும் மணப்பதில்லை என்று பிடிவாதம் செய்தான். இந்நிலையில் சாகரதத்தனும் அவன் பெற்றோரும் சமணர்போல நடித்து நீலியைப் பெற்றனர்.

நீலி, மணவினையின் பின்தான்இச்சதியை உணர்ந்தாள். ஆனால் மணத்தொடர்பை எவ்வாற்றானும் நீக்க இயலா தன்றோ? கணவனுக்குற்ற கடமையில் தவறாத மனைவியாக நடந்துகொண்டே, அவள் கணவனின் சமயத்திற்குப் புறம்பாய் நின்று சமணநெறியில் தோய்ந்திருந்தாள். அவள் வேட்டகத்தார் இதனை விரும்பாது அவளைப் புத்தநெறியுள் சேர வற்புறுத்தி வந்தனர். இவ்விரண்டகநிலை அவள் உறுதிக்குப் பெருஞ் சோதனையாய் அமைந்தது. ஒருநாள் புத்தத்துறவி (பிக்ஷு) ஒருவருக்கு உணவு சமைக்கும்படி மாமன் கட்டளையிட்டான். புத்தரோ ஊனுண்பவர். அவளோ, ஊனைக் கனவிலும் கருதத்துணியாத சமணநெறியினள். என் செய்வாள் பாவம். இருதலையும் செல்லமுடியாது அவள் ஒருவகை நடுநிலைச் சூழ்ச்சிகண்டாள். அவள், புத்தத்துறவி அணிந்திருந்த தோல் மிதியடியுள் ஒன்றையே எடுத்துத் திறம்படச் சமைத்துக் கறியாக்கி உண்பித்தாள். ஆனால் துறவி, விடைபெற்றுப் போகமுயலும் போது மிதியடி ஒன்று காணாது தேட, நீலி அவன் உண்டது மிதியடியையே என்று கூறினாள். கணவனும், மாமன் சாமியரும் அடக்கொணாச்

ம் அடக்கொணாச் சினம் கொண்டும் தேள் கொட்டிய திருடன்போல அதை விள்ளவும் மாட்டாமல் கொள்ளவும் மாட்டாமல் திகைத்தனர்.

பழிக்குப்பழி வாங்கும் முறையில், அவர்கள் நீலியின் கற்பின் மீது பழிசுமத்தி ஒதுக்கலாயினர். நீலி, அது கேட்டுப் பதைபதைத் தாள். ஆனால் தெய்வம் ஒன்று அவள் கற்பின் திறத்தை மெய்ப்பிக்க ஒருவழி கோலிற்று. அதன் செயலால் நகரின் கோட்டைவாயில் அடைப்பட்டு யாராலும் திறக்கமுடியாது போயிற்று. அக்கால மக்கள் கற்பின் திறத்தில் நம்பிக்கை கொண்டார்கள். எனவே, அரசன் ஆணையால் நகரப்பெண்கள் சகலரும் வந்து கதவைத் திறக்க அழைக்கப்பட்டனர். யாராலும் அது அசையவில்லை. ஆனால் நீலி சென்று தொட்ட அளவில்