யாழ் நங்கை
293
ஈடுபடாதவர்களைச் சுட்டெரிக்கும் ஆற்றல் அவ்வழகிக்கு இருந்தது. அவள் மறைந்த கணம் முதல் அவனுக்கு வேறெதிலும் மனம் செல்லாமல் தத்தளித்தான்.
பூ வேலையும், இசையும் இது முதல் அவனுக்கு பூ இன்பமூட்டவில்லை. அவை அவன் உள அமைதியையே சிதைக்கத் தொடங்கின.
அவன்
குடும்பத்தின் கிலியைப் பயன்படுத்தி, மருதவாணன் மேலும் அவர்களுடன் பழக மற்றொரு வாய்ப்பைத் தேடிக் கொண்டான். அவன் உறவினர் ஒருவர் மதுரைப் படைத் தலைவரான தளவாய் ராசப்பையனுடன் பழகி நட்பாடி வந்தார். அவர் மூலம், படைத் தலைவரிடமிருந்தே மடத்துக்கும், அப்பெண்டிருக்கும் பாதுகாப்புத் தேடித்தர எண்ணினான். இதை மடத் தலைவரிடமே கூறினான். ஆனால் தாயும், சேயும், பணிப்பெண்ணும் கூடவே இருந்ததனால் அவர்கள் யாவரின் ஆர்வ நன்றிகளையும், ஆர்வ நட்பையும் மீண்டும் அவனால் பெருக்கிக் கொள்ள முடிந்தது. அவன் வாக்குறுதி தந்ததுடன் நிற்காது, உடனே உறவினருக்கு முடங்கலும் போக்கினான். ஓரிரு நாட்களுக்குள் அவர்களுக்குப் பாதுகாப்பாகப் படைத் தலைவரின் கட்டளைப் படிகளுடன் இரு ன் காவலரும் அனுப்பப்பட்டார்கள். அக்கட்டளையை மாளிகை வாயிலும், மடத்திலும் வெளியே ஒட்டச் செய்து, காவலரையும் வெளியே நிறுத்தினான். இப்பொழுது மடத் தலைவரும், பெண்டிரும் முற்றிலும் அமைதியுற்றனர்.
ஒரு வாரத்துக்குள் மதுரைப் படை வீரர், பரிசுப் பொருள்களுடன் மதுரை நோக்கி மீண்டனர். அனைவரும் பெருமூச்சு விட்டனர்.
இந்நிகழ்ச்சியின் பின் மருதவாணன் சூழல் பழைய நிலைமைக்கே மீண்டது. ஏனெனில் மாளிகை வாசிகள் மறுபடியும் மாளிகைக்குள்ளே அடைபட்டு விட்டனர்.இவ்வளவு உதவி செய்த பின், அவன் தானாக உள்ளே செல்லத் தயங்கினான். அது அவர்கள் நன்றியைப் பயன்படுத்திக் கொள்ளும் பண்பற்ற செயலாகத் தோன்றக்கூடும் என்று அவன் எண்ணினான். ஆயினும் ஒருநாள் பொறுத்துப் பார்த்தபின் நலம்