யாழ் நங்கை
297
கொண்டிருந்தான். பதில் வருமா? வராதா? - இது அவன் ஏக்கம், வெறும் பாட்டுக்குப் பாட்டுத்தான் வருமா, அதில் காதல் வேண்டுகோளுக்கு இசைவுக்குறிப்பும் ஒரு சிறிதாவது இருக்குமா?
து அவன் மயக்கம், பாட்டாய் ஏன் எழுதினோம், பாட்டாய்ப் பதிலும் எழுதுவதற்குத்தான் இவ்வளவு நேரம் பிடிக்கிறதோ இவ்வாறு அவன் கழிவிரக்கம் கொண்டான். அவளுக்குப் பாட்டு எழுத வருமோ -இது அவன் ஐயப்பாடு, செம்பவளம் பேசியதை மறந்த மறதி.
பதில் இறுதியில் வந்தது. மாலை இருளிலேயே அவன் கையில் ஒப்படைக்கப்பட்டது.
அது அவனுக்கு மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் ஒருங்கே தந்தது. அது பாட்டில் எழுதப்பட்ட பதில். அவன் அஞ்சிய அச்சத்துக்கு டமில்லாமல் காதல் வேண்டுகோளுக்கு பதில் மட்டுமல்ல, இசைவு, வெளிப்படையான ஆர்வம் இசைவு அழைப்பே அதில் இருந்தது. ஒரு பெண்ணின் அழைப்பு, காதலழைப்பு - பருத்தி புடவையாகக் காய்த்தது காணும் மகிழ்ச்சியுடன் அவன் அதை மீண்டும் மீண்டும் வாசித்தான்.
வண்டு வருக, கதவு திறந்திருக்கும்
கண்டு வருக, வடக்குத் திசை அறைக்கே! உண்டு, வருகை முழு நிலவு நாள் அன்று! கொண்டு நிழலும் மயங்குமென் காதலே!
“ஆகா! என்ன பாட்டு, பாட்டில் என்ன அழைப்பு! முழு நிலவு நாளில் வருக! அது இன்றே! வடக்குத் திசை அறைக்கு வருக! ஆம், அது வீட்டின் பின்புற அறை; மடத்திலிருந்து எளிதாகத் தாவிச் சென்று எட்டும் அறை! கதவு தட்ட வேண்டியதில்லை; அது திறந்தேயிருக்குமாம்! காதலியிடமிருந்து முதல் நாளிலேயே இத்தகைய அன்பின் ஆர்வ அழைப்பு துணிச்சலான ஆர்வ அழைப்பு எந்தக் காதலனுக்கும் வந்திராது. நான் தனிப் பெருமையுடையவன்" என்று அவன் உள்ளம் குதித்தாடிற்று. மகிழ்ச்சியால் அவன் தலை சுற்றிற்று.
ஆனால் குதித்தாட, தலை சுற்ற அது நேரமன்று. அன்றே, அன்றிரவே முதல் காதல் சந்திப்புக்குச் செல்ல வேண்டும். அதற்கான தயாரிப்புகளில் அவன் முனைந்தான். உடுத்த ஆடை
-