பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(298) ||-

அப்பாத்துரையம் - 28

களைந்து களைந்து திருத்தி உடுத்தல் - தலைவகுத்த வகுப்பு மாற்றி வகுப்பு வாருதல், முகம் துடைத்துத் துடைத்துப் பார்த்தல் முதலியன தொடங்கினான்.

எல்லாரும் துயிலில் அடங்கும் நேரம் இரவு பத்து நாழிகை, அதற்கே அவன் காத்திருந்தான். பின் ஒரே எட்டில் மாளிகையின் பின்புறம் அடைந்தான். கதவு மூடித்தான் இருந்தது. ஆனால் கை வைத்ததும் திறந்து கொண்டது. அங்கே சிறிது நேரம்தான் இருந்தான். செம்பவளம் மெல்ல அங்கே வந்தாள். செங்காந்தள் ன்னும் சிறிது நேரத்தில் வர இருக்கிறாள் என்று கூறிச் சென்றாள்.

அவன் நாடி நரம்புகள் முழு முறுக்கேறித் துடித்தாடின. ஆர்வமும், ஆவலும் உச்சநிலையடைந்தன.

நள்ளிரவு. பட்டிசை சலசலத்தது. சதங்கைகள் ஒலித்தன. மெல்லச் செங்காந்தள் அவன் முன் வந்து நின்றாள். ஆனால் அவள் முகம் சீறி இருந்தது. அவள் பின்னால் செம்பவளம் வந்து நிழல்போல நின்றாள். அவன் புன்னகை தவமும் முகத்துடன் அவளை நோக்கினான்.

66

'அன்பரே! என்னை மன்னிக்க வேண்டும். பாட்டுக்குப் பாட்டாய், எதை எதையோ எழுதிவிட்டேன். அதற்கு வருந்துகிறேன். ஆனாலும் குறித்தபடி வந்து, உங்களுக்கு என் கடமையை நிறைவேற்றிவிடவே முனைந்தேன்" என்றாள்.

மருதவாணன் சற்றுத் திடுக்கிட்டான். இது மீண்டும் கட்டுப்பாட்டு இயந்திரத்தின் சந்திப்புத்தான், முதலில் கண்ட ளமை துடிக்கும் பெண் அல்ல என்று கருதினான்.

சற்று நேரம் மௌனம் நிலவிற்று. பின் அவள் வாய் திறந்தாள். “நான் விடை பெற்றுக் கொள்ளட்டுமா? இப்படித் தனிப்பட, இரா நேரத்தில்..." என்று தொடங்கினாள் அவள்.

66

“தனியே சந்திக்கத்தானே கோரினேன். அழைப்புக் கூட விடுத்தீர்கள்?”

66

நான்தான்

ஆம், தவறு என்னுடையதுதான். கூறிவிட்டேனே! பாட்டுக்குப் பாட்டாய் எதுகை மோனையிட்டு என்னவோ எழுதிவிட்டேன், மன்னியுங்கள். இப்போது உங்களை