யாழ் நங்கை
299
முழுதும் ஏமாற்றி விடவில்லை. நானே நேரில் வந்து விளக்கம் சொல்லிவிட்டேன். இனி நான் இங்கே நிற்கக்கூடாது..” என்று கூறி மறுசொல் எதற்கும் வழி வைக்காமல் சரேலென்று போய்விட்டாள்.
என்ன இது?' என்று கேட்பதற்குள் செம்பவளமும் போய்விட்டாள்.
6
கண்ணிலான் பெற்றிழந்தான்' என்ற நிலையாயிற்று மருதவாணனுக்கு. இன்ப ஆர்வத்தின் உச்சியிலிருந்து அவநம்பிக்கையின் அடியாழத்தில் சென்று அவள் விழுந்தாள். காதல் கனவெல்லாம் ஒரே அவலச் சோகமாயிற்று. இரண்டு மூன்று நாட்கள், அவன் தன் அறையிலேயே அடைந்து கிடந்தான். எதையும், எவரையும் பார்க்கவே எண்ணவில்லை. நல்ல காலமாக, செபசித்தியோன் அந்நாட்களில் வந்து காணவில்லை. கண்டிருந்தால் இடைக்காலக் காதல் ஈடுபாடு அம்பலமாகியிருக்கும்.
அவநம்பிக்கையின் ஆழத்திலும் ஒரு வேளை செங்காந்தளிடமிருந்து செம்பவளமோ, யாரோ ஏதாவது செய்தி தெரிவித்து விளக்கமாவது தரமாட்டார்களா என்ற ஒரு ஆறுதலொளி மின்னிற்று. ஆனால், இரண்டாம் நாள் இரவுக்குள் அவன் உள்ளம் ஒரே அந்தகார இருளாயிற்று.
அந்த இருளில் மின்னலாகச் செம்பவளம் திடீர் வருகை தந்தாள். அவன் பேசவில்லை. அவனைப் பிடித்தாட்டினாள். "வருகிறாள் தலைவி, உடன் தயாராகு! நேரமில்லை; அதோ வந்து விட்டாள்” என்று கூறிவிட்டு ஓடினாள்.
நறுமணம் விரைந்து வந்தது. சலசலவென்ற பட்டிசைப்பு. முன்பு கட்டுப்பாட்டு இயந்திரமாகக் காட்சியளித்த ஆயிழை - நாணமும், வெட்கமும் மட்டுமல்ல, உணர்ச்சி பெற்ற ஆண்மை யுருவான அணங்கு, கட்டறுத்து விழும் பறவை போல அவனருகே அவன் படுக்கையில் வந்து விழுந்தாள்.
அன்று அவன் தலை கோதவில்லை; வாரி வகுப்பெடுக்கவில்லை. ஆடை திருத்தவில்லை. அன்றைய தயாரிப்பு வேலை ஒன்றே ஒன்றுதான். அவன் அறைக் கதவை மறவாது சாத்தினான்.