பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




யாழ் நங்கை

301

வெளியிட அவள் இணங்கவில்லை. தானும் தாயிடம் எதுவும் கூற மறுத்தாள்!

"போர்ச்சுகீசிய வெள்ளைப் பெண்ணாயிற்றே! தமிழ் நாட்டானை மணந்துகொள்ளத் தாய் தடை செய்வாளென்று அவள் நினைக்கிறாளா?”

இனி நண்பன் செபசித்தியோனுக்கு உண்மை நிலை கூறாதிருப்பது தவறு என்று எண்ணினான். அவனிடம் யாவும் கூறி, செங்காந்தள் புதிருக்கு விளக்கம் யாது என்று கேட்டான்.

அவனுக்கும் தெளிவாய் ஒன்றும் புரியவில்லை. ஒரு வேளை அது வெள்ளையர், நாட்டவர் இன வேறுபாடாய் இருக்கலாம். ஆனால் இன்னொரு ஐயத்துக்கும் இடமுண்டு என்று அவன் கருதினான். அது அவன் தாய் தந்தையரும் மடத்தலைவரும் காட்டிய மனப்பான்மையே. மருதவாணன் கிறித்தவ சமயம் ஏற்க வேண்டும் என்று தாய் தந்தையர் விரும்பலாமோ! செங்காந்தள் காதலன் தன்மதிப்பு இந்தச் செயலைத் தகாது என்று ஒருவேளை எண்ணச் செய்திருக்கலாம் என்று அவன் கருதினான்.

-

செபசித்தியோன் உலகறிந்தவன். நடை நயமும், சொல் நயமும், பண்பும் உடையவன். செய்திகள் எதுவும் தெரிவிக் காமலே, செங்காந்தளின் தாயிடம் மெல்லச் செங்காந்தள் மருதவாணன் திருமணம் என்ற சொற்களை இழையோட விட்டான். அதிலிருந்து அவள் உள்ளப் பாங்கு தெளிவாகத் தெரிந்து விட்டது. அவள் வெள்ளையர், நாட்டவர் வேற்றுமை சிறிதும் கருதவில்லை. சமய வேறுபாடு கூட அவளுக்கு ஒரு சிறிதும் கிடையாது. மருதவாணனைப் பற்றிய அவள் மதிப்பும், பாசமும்கூடப் பெரிதாகவே இருந்தன.

அப்படியானால் செங்காந்தள் தாய்க்குச் செய்தி யறிவிக்கத் தடை கூறுவதின் புதிர் யாது?

நண்பர் இருவரும் இதுபற்றிப் பலப்பலவும் சிந்தித்தனர்.

திடீரென்று செபசித்தியோன் மருதவாணன் துடையில் ஓங்கியடித்தான். அவன் 'ஐயோ' எனுமுன், மீண்டும் அடித்த வாறே, "புதிர்வேறு என்னடா? நீ அவளைத் தண்டித்து விட்டாய்!” என்றான்.

-