பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

15

அது திறந்தது. அவள் மீது வேட்டகத்தார் சுமத்திய பழிமொழி அவளுக்கு மேலும் புகழ் தந்ததேயன்றி வேறன்று.

இரத்தின கரண்டகத்தின் நூலாசிரியர் சமந்தபத்திர அடிகள் காலம், கி.பி. இரண்டாம் நூற்றாண்டாதலால், நீலி பற்றிய இக்கதை இதனினும் பழமையானதாதல் வேண்டும் அதோட அவர் தமிழ்நாட்டவர் என்பதும், அவர் வாழ்ந்த ஜினகாஞ்சி,கிறிஸ்தவ ஊழித் தொடக்கத்தில் சமணநெறி யின் தலைமையிடமாயிருந்தது என்பதும் கவனிக்கத்தக்க செய்திகள்.

இங்ஙனம் பல நூல்களிலும் கூறப்படும் இந்நீலிக் கதை மிகப் பழமைவாய்ந்த தொன்றாகும். காலப்போக்கில் அது பலபடியாக மாறுதலுற்று மேற்சொன்ன மூன்று நூல் களிலும் மூன்று வகையாகக் கூறப்படுகிறது. நீலகேசியின் கதை, தலபுராணக் கதையையும் சேக்கிழார் கதையையும் விட இரத்தின கரண்டக அரைக்கதையையே மிகுதியும் ஒத்திருக்கிறது என்னலாம். ஆயினும், நீலகேசி காவியம் கதையை அடிப்படை யாகக் கருத்தாகக் கொண்டதன்று. சமயக்கொள்கைகளை அலசி விளக்கவந்த நூலே. அவ்விளக்கங்களை நோக்க ஒரு நூலாகமட்டுமே கதை உதவுகிறது. ஆகவே கதைப் பகுதியை ஆராயவேண்டிய நிலைமைக்கே இடமில்லை. அது மக்கள் மரபுரைகளில் கண்ட பெயர்களையும் செய்திகளையும், தம் சமய விளக்கத்தின் சட்டமாய் அமையும்படி ஆசிரியர் புனைந்த புனைவேயன்றி வேறன்று. ஆசிரியரே இக்கதை தம் மனத்திரையில் கண்ட புனைவுக் காட்சி என்று கூறுகின்றார். இலக்கியப் பண்பு

கதைப் பகுதியைப்போலவே, நூலின் இலக்கியப் பண்பும், நூலின் முதல் நோக்கத்துக்குப் புறம்பானது சமய விளக்கம் கூற வந்த நூல், இலக்கியப் பண்பை முதல் நோக்கமாகக் கொண்டதாக இருக்கமுடியாது. ஆயினும் இவ்வகைப்பட்ட நூல்களில் காணும் கலை நயத்திலும் மேம்பட்ட நயங்கள் இதில் உண்டு என்பதை நூலின் போக்கில் காணலாம். உணர்ச்சிக்கும் விரிவுரைக்கும் இடந்தராத இப்பொருளையும் கூட ஆசிரியர் தக்க கதை ஒன்றில் பூட்டி உரையாடல் வடிவில் கூறி, அதன்