பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(304

அப்பாத்துரையம் - 28

விழாத்தானே! இதை நீங்கள் முன் நின்று நடத்துகிறீர்களே, இதற்கு என்ன காரணம்?

நன்:- இது என்ன கேள்வி, அஞ்சி! பொங்கல் தமிழர் விழா, மற்றவை தமிழர்க்குரியதன்று.

அஞ்:- சரி, கிருஸ்துமஸ், ஈதுப் பெருநாள் ஆகியவை கூடப் பழந்தமிழர் விழாவல்லவே? தமிழர் கிறிஸ்தவ சமயம், இஸ்லாம் கொண்டாடுகிறார்களே,

சமயம்

சார்ந்து

கொண்டாடலாமா?

அதைக்

நன்:- அவர்கள் சார்ந்துள்ள சமய விழாக்களை அவர்கள் கொண்டாடுகிறார்கள். அதில் தவறில்லை. மேலும் அவை குற்றமற்ற விழாக்கள்; நல்ல விழாக்கள்.

அஞ்:- அப்படியானால் தீபாவளி முதலியவை கெட்ட விழாக்களாவது எப்படி? கிறிஸ்தவ, இஸ்லாம் நெறிதழுவிய தமிழர் கிருஸ்துமஸ், ஈதுப் பண்டிகைகள் கொண்டாடுவது போலத்தானே இந்து சமயம் தழுவியர்கள் அப் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். அதில் தவறென்ன?

நன்:- கிருஸ்துமஸ், ஈதுப் பண்டிகைகளைச் சிறப்பாகக் கிறிஸ்தவரும் முஸ்லிம்களும் கொண்டாடினாலும், நானும் அதில் அந்நண்பர்களுடன் கலந்து கொள்வது உனக்குத் தெரியும். காரணம் அவை மாமலையிலிருந்து வந்த மருந்து போல, தொலை நாடுகளிலிருந்து வந்தாலும், தமிழ்ப் பண்புக்கு மாறுபட்டவை யல்ல. தமிழர்களை எவ்வகையிலும் அவமதிக்கவோ, புண்படுத்தவோ செய்வதில்லை. தமிழ் விழாக்களுடன் தமிழ் விழாக்களாக அவற்றை ஏற்று, கிறிஸ்தவ இஸ்லாமிய நண்பர் களுடன் அவற்றை நாம் கொண்டாடுவதன் காரணம் அதுவே. எல்லாத் தமிழரும் சேர்ந்து முழுநிறை தமிழ்த் தேசியம் பேண அது உதவுகிறது. ஆனால் தீபாவளி முதலிய வடவர் பண்டிகை கள் தமிழரை அவமதிக்கும் புராணக் கதைகளைக் கொண்டாடு பவை. தமிழரைப் புண்படுத்துபவை. அத்துடன் அவை தமிழ்ப் பண்புக்கு மாறுபட்டவை.

அஞ்:- மலையாளிகள் கொண்டாடும் ஓண விழாக்கூடத் தமிழ்ப் பண்புடையதுதானா?