(306
அப்பாத்துரையம் - 28
உயர் நலம் வகுத்தார்கள். அதுவே தமிழ்ப் பண்பு. அதைத் தமிழர் காதல் வாழ்வு, குடும்பம், சமுதாய வாழ்வு, பொருளியல், ஆட்சி, சமயம் ஆகிய எல்லாத் துறைகளிலுமே காணலாம். திருக்குறள் இவற்றுக்குக் கலங்கரை விளக்கங்களான இலக்கண வரம்புகள் வகுத்துள்ளது. சங்க இலக்கியமும் சிலம்பு மேகலைகளும் இவற்றுக்குக் கண்கூடான காட்சி விளக்கங்கள் அளிக்கின்றவை. அவற்றுள் ஒன்று “ஒரேர் உழவர்” என்ற புலவர் பாடியது.
அஞ்:- என்ன பெயர் அது? விசித்திரமாக இருக்கிறதே!
நன்:- ஆம்! “ஒரேர் உழவர்” அந்தப் புலவருக்கு இயற்பெயர் இன்னதென்றே தெரியவில்லை. ஆனால் "ஒரேர் உழவர்” என்ற ஒரு பொருள் பொதிந்த அழகிய தொடரை அவர் படைத்து, அதன்மூலம் ஓர் ஒப்பற்ற சித்திரம் காட்டி அதைத் தன் குடும்ப வாழ்க்கைக்கு உவமையும் ஆக்கினார். மற்றப் புலவர்களும் மக்களும் அத்தொடரையே அவருக்குச் சிறப்புப் பெயராக்கி விட்டார்கள். அவர் இயற்பெயர் நமக்கு வந்து எட்டாமல் இதுவே செய்துவிட்டது.
அஞ்:- ஆ, அப்படியா? என்ன அழகுப் பெயர்!
2
அகக் காட்சி -1
காலம்: மார்கழி மாதம், பிற்பகல் வேளை.
இடம்: ஊர்ப்புற வயற்காடு; மழைத் தூறலால் பசபசத்துள்ள செவ்வல் நிலத்தினூடாக விரையும் தேர்.
ஆட்கள்: தேரில் புலவர், பாகன்.
பாகன்:- பயணத்துக்கு ஏற்ற மாதமும் அல்ல, காலமும் அல்ல இது. பாருங்கள், செம்மண்ணில் மேலீடாகப் பெய்த தூறல் மேல் பகுதியைச் சருக்கலாக்கியிருக்கிறது. தேரின் சக்கரங்கள் அடிக்கடி வழுகிச் செல்கின்றன. குதிரையின் காலடிகளில்
லாடத்துடன் இலாடமாகப் புழுதியும் சேரும் எட்டிப் புடைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு பொருந்தாத