(308
அப்பாத்துரையம் - 28
பாகன்:- ஆம்; எப்படிப்பட்ட தேர்க்கால் தெரியுமா? அதைச் செய்த தச்சன், ஒரு நாளைக்கு எட்டுத் தேர்களைச் செய்து பூட்டி ஓடவிட்டு விடுவானாம். அத்தகைய தச்சன் ஒரு மாதமாகப் பெருமுயற்சி செய்து, ஓர் ஒப்பற்ற தேரின் கால் ஒன்றைச் செய்து முடித்தானாம்! அந்தத் தேர்க்காலின் உறுதக்குத்தான் அஞ்சியை அவர் உவமை கூறினார்.
புலவர்:- ஆகா, ஆகா! என்ன அழகு? செந்நாப்புலவர் என்பது ஔவையாருக்கே தகும். அவர் பாகராக மட்டுமென்ன, தச்சராகவும், ஆட்சியாளராகவும்கூட இருந்திருக்க வேண்டும். ரண்டு தொழில்களின் அருமையையல்லவா பாட்டில் உவமான உவமேயமாகப் புகுத்திக் காட்டியிருக்கிறார்.
'களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து
எம்முளும் உளன்
ஒரு பொருநன், வைகல்
எண்தேர் செய்யும்
தச்சன்,
திங்கள் வலித்த
காலன் னோனே!'
(புறம் 87)
பாகன்:- பாம்பின் கால் பாம்பு தானேயறியும். புலவர் நயங்களை மட்டும் புலவரிடமிருந்து தானே முழுவதும் உணர வேண்டும்; தேர், தச்சுத் தொழில் நயம் எனக்குப் புரிகிறது. அஞ்சியின் அருமையும் புரிகிறது. ஆனால் இதில் ஆட்சி பற்றி என்ன இருக்கிறது?
புலவர்:- (சிரித்தவாறு) அதில்தானே நயம் இருக்கிறது. அஞ்சி பெரு வீரன். பேரரசன். ஆனால் அவன் நாடு சிறிது, சிறிதிலும் சிறிது. ஒரு நாளில் ஏழு பெருநாடு வெல்லும் வீரன் அவன். ஆனால் அவன் எந்த நாட்டையும் வெல்வதில் அதைப் பாதுகாப்பதிலே செலவிடுகிறான். எழுகடல் கடந்த ஏழிசை மன்னர் மரபில் வந்தவன் அவன் அந்த ஆட்சித் திறனை எல்லாம் தகடூரளவில் ஒடுக்கி, அதனைச் செயம் செய்வதில் அவன் செலவிடுகிறான். ஆலரச மரங்களின் வளர்ச்சியை அவன் ஓர்