யாழ் நங்கை
309
அரைக்கீரைப் பாத்திக்கு அளிக்கிறான். ஆனை அம்பாரிகளின் செல்வத்தை அவன் ஆடு மாடுகளின் மூலமே உண்டு பண்ணுகிறான். பெரிய அணைக்கட்டுகளால் தேக்க வேண்டிய வளத்தை, அவன் சிறு வரப்புகள் மூலமே உண்டுபண்ணுகிறான். பாகன்:- ஆ, தங்கள் விளக்கத்தை ஒளவையார் கேட்டால்கூட வியப்படைவார்! ஔவையார் ஓர் உவமையைத் தேடிப் பிடித்ததே அருமை. நீங்களோ...
புலவர்(புன்முறுவலுடன்) எல்லாம் பிறந்த நாட்டின் பெருமை. அதன் பண்பு பாகரிடம் இருக்கிறது; தச்சரிடம் இருக்கிறது. அரசனிடம் அதைக் காண்கிறோம். உழவரிடம், வீரரிடம், உம்மிடம், என்னிடமெல்லாம் உண்டு.
பாகன்:- உம்மிடமும் என்னிடமுமா? உழவரிடமுமா?
புலவர்:- ஆம். அதோ!
(கலப்பை எருதுகளுடன் உழவன் ஒருவன், வேக வேகமாக
விரைகிறான்.)
காலம்: பிற்பகல்.
இடம்: ஊர்ப்புறம்.
அகக் காட்சி - 2
ஆட்கள்: புலவர், பாகன் (தேரருகில்), உழவன்.
உழவன்:- (எருதுகளைத் தடவிக் கொடுத்துக்கொண்டே அவற்றை நோக்கி) விரைந்து செல்லுங்கள். என் செல்வங்களே! வானின் செவ்வியும் நிலத்தின் பதமும் ஒத்து, உழவுக்கு ஏற்ற பருவம் வந்திருக்கிறது. இப்போது ஒரு கணம் கூடக் காலம் தாழ்த்தாதேயுங்கள்.
பாகன்:- யாருடன் போகிறாய் அண்ணே! கூட ஒருவரையும் காணோமே!
உழவன்:- ஏன். இதோ செல்கின்றனவே, என் செல்வங்கள்! இந்த எருதுகள் நன்றாய் இருக்கும் வரை எனக்கு என்ன குறை? ஆனால் இன்று நின்று பேச நேரம் இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்துக்குள் உழுதாகவேண்டும்.