(310)
அப்பாத்துரையம் - 28
புலவர்:- என்ன இவ்வளவு அவசரம், அன்பரே! மழை இப்போதுதானே பெய்திருக்கிறது. உம்மிடம் நாங்கள் சில செய்திகள் கேட்க வேண்டும். சிறிது தங்கிப் போகலாமே!
கேட்பதைக்
நான்
உழவன்:- ஏதோ, நீங்கள் மிக நல்லவர்கள், அயலூர், கேளுங்கள். விரைந்து போகவேண்டியிருக்கிறது. எனக்கு ஒ ர ஒரு காணி நிலம் இருக்கிறது. எனக்கும் என் ஒரு இல்லத் தலைவிக்கும் வீட்டிலுள்ள இருகண்மணிகளுக்குக்கும் அது போதும்.ஆனால் அதை உழுவதற்குக் கருவியாக ஒரே ஒரு ஏரும், துணைகளாக இந்த ஒரே சோடி எருதுகளும்தான் உண்டு. இன்று பாழுதுக்குள் உழுது முடித்தால்தான் பதம் போகுமுன் வேலை முடியும். அதனால்தான் உங்களிடம்கூட மிகுதி நின்று பேச முடியவில்லை.
புலவர்:- அப்படியா, மிக நன்று. ஆனால் நீ நல்ல உழைப்பாளியாக இருக்கிறாயே! சிறிது பணம் சேர்த்து இன்னும் ஒரு ஏர், கூட ஒரு சோடி எருது வாங்கிக் கொண்டால் என்ன? இப்படி பரபரப்பில்லாமல், ஆர அமர வேலை
செய்யலாமல்லவா?
உழவன்:- என்னைவிட எவ்வளவோ அறிவும் அனுபவமும் உங்களுக்கு உண்டு, அண்ணா! உங்களுக்கு நான் என்ன சொல்வது! ஒருவன் எவ்வளவு பெரியவனானாலும் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதுதானே இன்ப முறை? இந்த வீட்டுக் குடும்ப வாழ்வு போலத்தான் வெளிக் குடும்ப வாழ்வும்! ஒரு வீட்டில் ஒரு இல்லக் கிழத்தி, ஒரு இல்லக் கிழவன்! அவர்கள்
வாழ்வின் பொலிவுக்கு ஓரிரு கண்மணிகள்! அதுபோல, புற வாழ்விலும் எனக்கு ஒரு காணி நிலம், ஒரு ஏர்! இந்த ஒரு சோடி கண்மணிகள்! இவ்வளவு போதும். இவற்றைத்தான் நாம் கண்போலப் பேண முடியும். எவ்வளவு பணம் திரட்டினாலும், அது இந்தச் சிறு வட்டத்துக்குள்ளே சுழன்றால்தான் முழு இன்பம் காண முடியும்.
பாகன்:- ஆகா, உன் அனுபவ அறிவே அறிவு.
உழவன்:- ஆம். ஏதோ என் சிறு வாழ்வின் அனுபவத்தைச் சொன்னேன். நான் இப்போது போகட்டுமா?