பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




யாழ் நங்கை

313

பொன்:- எனக்கோ எதிலும் மனம் பற்றவில்லை. இப்போது என்ன பாட்டுப் பாடமுடியும்?

மரு:- வள்ளைப் பாட்டு.

பொன்:- இப்போது எப்படி அதைப் பாடுவது?

மரு:- ஏன்? மூங்கிலரிசி இருக்கிறது; அதைக் குற்றிக் கொண்டு பாடுவோமே! இதோ இங்கிருக்கிற பாறையையே உரலாக்கி, யானைக்கொம்பை உலக்கையாகக் கொண்டு இந்த அரிசியைப் பாடிக்கொண்டே குற்றுவோம். பின் சேம்பின் இலை இருக்கிறது. அதைச் சுளகாக வைத்துப் புடைத்துக் கொண்டு பாட்டை முடிப்போம்.

பொன்:- சரி; எதைப் பற்றியடி பாடுவது?

மரு:- வேறு எதைப்பற்றி? நீங்கள் உள்ளத்தில் வைத்து மறைத்தாலும், உங்கள் முகத்தில் வந்து நிழலாடுகிறாரே, அவரைப் பற்றித்தான்!

பொன்:- ஆ!

மரு:- ஆம், அம்மா! எனக்குத் தெரியாதா? சொல்கிறேன்; அன்றொரு நாள் நள்ளிரவில், கருமுகில் திரண்டு மின்னி இடித்து மழை பொழிந்த சமயம், திடீரென நீங்கள் முன்னே எழுந்து சென்று விரைய, நான் உங்கள் பின்னால், உங்களுடனேயே தொடர்ந்து வந்து கண்ட காட்சி நினைவிருக்கிறதா? நம் தினைப்புனத்தில் வந்து பரண் மீதிருந்து காவல் செய்தாரே அவர் ஆம், அந்தக் காளை கானவன்... ஆம், அவரேதான்... அவரேதான்!..சிலம்பன்..

ww

பொன்:- போடி நீ, குறும்பு பேசுகிறாய்!

மரு :- சரியம்மா, நான் சொல்லவில்லை.

பொன்:- பார்த்தாயாடி, அதற்குள் கோபம் வந்து விட்டது. நான் இனி ஒன்றும் பேசவில்லை. சொல்ல வந்ததைச் சொல்லு.

மரு:- அப்படி வாங்க வழிக்கு. ஏதோ ஒரு ஓசை கேட்டு அவர் திரும்பி நிமிர, நாம் அஞ்சி ஒளிய எண்ண, கண்மூடி விழிக்குமுன் மின்னல்போல நாம் கண்ட காட்சி ஆகா, என்ன காட்சி அது!