யாழ் நங்கை
317
மரு:- இந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாமம்மா! இனி அவர் இப்படி வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கமாட்டார். நான் கவலைப்பட வேண்டியது இல்லை. நீங்கள் பெருமூச்சு விட வேண்டியதில்லை. கவலையுற வேண்டாம்; இதோ பாருங்கள் வேங்கை மரத்தடியில்! உங்கள் தந்தையுடன் அவர்.
புறக் காட்சி (மங்களக் காட்சி)
இடம்: வேங்கை மரத்தடி
ஆட்கள்: தலைவன் சிலம்பன், சிறுகுடிவாணன், காடு வெட்டி.
சிலம்பன்:- தினைப்புனம் காக்கத்தான் இச்சிறு குடிக்கு வந்தேன். ஆனால் இங்கிருந்து போகும்போது என் உயிரைச் சிறுகுடியில் வைத்து விட்டுத்தான் போகிறேன்.
காடுவெட்டி:- ஆ, அப்படியா?...அதுதான் நம் சிறுகுடி நாட்டார் நான் போகும்போதே அப்படி முணுமுணுக்கிறார்கள். இப்போதல்லவா செய்தி விளங்குகிறது. இதை உங்கள் தாய் தந்தையர் உறவினர் அறிவார்களா?
சிலம்:- ஆம்; அறிவார்கள்!
காடு:- நான் இப்போது ஒன்றும் முடிவு சொல்வதற்கில்லை. என் துணைவி செஞ்சாந்தும் பொன்னியின் நற்றாயும் ஏதோ குறிப்பாகத்தான் சொன்னார்கள்; அவர்களிடம் கலந்து பின் பேசுகிறேன்.
சிலம்:- அவர்கள் என்னை அறிவார்கள். பொன்னியின் வாழ்விலும் அக்கரை கொண்டவர்களே. அவர்கள் ஆதரவையே தருவார்கள் என்று எதிர் பார்க்கிறேன். தங்கள் உள்ளம்....
காடு:- தந்தையின் உள்ளம் வேறு எப்படி இருக்கும்?
பொன்னி விரும்பினால்.!