பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

17

தொல்காப்பியரும் உயிர் வகைகளில் ஓரறிவுயிர் முதல் ஐயறிவுயிர் ஈறாக, உயிர் வகைகளை வகுத்து, மனிதன் ஆரறிவுயிர் என்று கட்டுரைத்தல் காணலாம். சமண நூல்களில் மட்டுமே இப்பாகுபாடு கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செடி கொடிகளைப்போல் பாறையும் புற்று வளர்கிறதே என்ற ஐயமகற்றி, நீலகேசி பாறையும் புற்றும் பிறபொருள்மேலடக்கி வளர்வனபோல் தோன்றுகின்றன என்றும், அவற்றின் வளர்ச்சி புற வளர்ச்சி அல்லது போலி வளர்ச்சியே என்றும் காட்டி, செடி கொடிகள் பிற உயிர் களைப்போலவே உள்ளீடான வளர்ச்சி உடையவை என்று விளக்குகிறாள். புற்று வளர்ச்சியில் புற்றின் உருவம் வடிவும் மாறுகின்றன. உயிர் வளர்ச்சியில் அளவுமாறுதலன்றி உருவும் வடிவும் பெரும்பாலும் தொடர்ந்த நிலைபெறுகின்றன.

இதுவன்றி மேலும், செடிகொடிகள், விலங்குகள் போல் நோய்க்காளாய், மருந்து வாயிலாக நோய் நீக்கம் பெறத்தக்கவை. சூழ்நிலைக் கேற்ப மாறுபாடும் செயலெதிர்ப்பும் உடையவை. பால் வேறுபாடும் இனத் தொடர்ச்சியும் பெருக்கமும் கொண்டவை. இத்தனை ஒற்றுமைகளுக்கும் மேலாகச் செடிகளின் புலனுணர்வை விளக்க, இன்று அறிவியலார் அரிதில் எடுத்துக்காட்டும் சான்றாகிய 'தொட்டால் வாடி'யின் இயல்பையே நீலகேசியும் எடுத்துரைப்பது வியக்கத்தக்கதாகும்.

இந்திய சமயக்கோட்பாடுகள் அனைத்தும், ஒலியை ஒளியினும் நுண்ணியதாகவும், மேம்பட்டதாகவும் கொள் கின்றன. ஒளி நெருப்பின் தன்மையுடையது; ஒலியோ வானி னூடாக இயங்குவது என்று எல்லாத் தத்துவக் கோட்பாடு களும் தெரிவிக்கின்றன. ஆனால் சமணநெறி ஒன்று மட்டும் ஒலி பொருள்களின் அணுக்களினூடாக இயங்கும் அழுத்தத்தால் பரவுகிறது என்று கொண்டது. ஒலியினும் ஒலி பின்னிட்ட விரைவுடையது என்பதை இன்றைய அறிவியலார் கூறும் எடுத்துக் காட்டாலேயே நீலகேசி விளக்குகிறாள். காட்சியும் கேள்வியும் ஒன்றுபடவே நுகரப்படுகின்றன எனச் சாதிக்கும் புத்தரிடம் அவள் (மின்னலும் இடியும் ஒரே நிகழ்ச்சியாயினும், மின்னல் கண்டபின், சற்றுநேரம் தாழ்ந்தே பேரிடி யோசையைக் கேட்கிறோம் என்பதை விளக்குகிறாள்.மின்னலும்