பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

அப்பாத்துரையம் - 28

இடியும் ஒரே நிகழ்ச்சி என்பது அண்மையிலேயே அதாவது 18 ம் நூற்றாண்டிலேயே மேல் நாட்டறிவியலாரால் மெய்ப்பிக்கப் பட்டது).

இறுதியாகப் புத்தரது உலகியல் கோட்பாட்டை (அநாத்ம) வாதத்தை எதிர்க்கையில் அறிவுற்ற சடத்தினின்று அறிவப்பொருள் தோற்றுவது இயல்பன்று என்று நீலகேசி கூறுவது, தற்கால உள நூலாராய்ச்சியாளரால் மேற்கொள்ளப் படும் அரிய ஆராய்ச்சிக் கருத்து ஆகும்; இதன் மூலமே அவள் உடல் வேறு; உயிர் (ஆன்மா) வேறு; உடலழியினும் உயிர் அழியாது என்பதை நாட்டுகிறாள்.

கொல்லாமை நெறியும்

இந்திய சமயக் கோட்பாடுகளும்

இத்தகைய அறிவியல் உண்மைகள் நூலில் சிறக்கக் காணப்படினும், நூலாசிரியர் தனிப்பட வற்புறுத்தும் சமணச் சிறப்புப் பண்பு கொல்லாமை (அஹிம்சை) என்பதை நாம் மறத்தலாகாது.எச் சமயத்தை ஆராயும்போதும் நீலகேசியால், 'கொல்லாமையே உயர் நெறி' (அஹிம்சா பரமமோ தர்மம்) என்ற சமணக்கோட்பாடே உரைகல்லாலகக் கொள்ளப்படுகிறது.புத்த சமயம் சமணர் சமயத்தைப்போலவே, கொல்லாமையை உச்சிமேற் கொள்ளினும், கொல்லாமையின் நேரான செயல் மறைப் பயனாகிய புலால் உண்ணாமையை மேற் கொள்ள வில்லை என்பது, இந்திய சமய ஆராய்ச்சியாளர் அனைவரும் அறிந்ததே. புத்தரை எதிர்க்கும்போதெல்லாம், அவர்கள் கொல்லாமை நெறி மெய்ந்நெறியானால் அதன் முழு நிறைவு, புலால் மறுத்தலேயாகித் தீரவேண்டும் என்பதை, நீலகேசி வலியுறுத்திக் கூறுகிறாள். வேதவாதத்தைக் கண்டிக்கும் போதும் இதை முறை கையாளப்படுகிறது.

புத்த சமயமட்டுமன்றி, இந்திய சமயநெறிகள் அனைத்தும் (கோட்பாடுகள்) சமணருடனொப்பக் கொல்லாமையை உயர்வாகக் கொள்கின்றன. வேதங்களை ஏற்கும் கோட்பாடு களாகிய ஆறு சமயக் கிளை (தரிசனங்)களுள்ளும் முத லதாகிய பூர்வ மீமாஞ்சை ஒன்று நீங்கலாக, ஏனையவை