பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

19

கொல்லாமையை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அடிப்படை சமயக் கொள்கையாக ஏற்கின்றன. சமயத்தின் பேரால் வேள்வியில் உயிர்ப்பலி யிடுவதைச் சமணர்கள் எதிர்க்கும் அளவில், சற்றும் பின்னடையாத சாரங்கியரும் எதிர்க்கவே செய்கின்றனர். யோகநெறி சாங்கிய நெறியின் திரிபேயாதலால், அதுவும் சாங்கியத்தின் இந்நிலையை முற்றிலும் மேற்கொண்டது.

இன்று இந்திய சமயக் கோட்பாடுகளில் முதலிடம் பெறும் வேதாந்த நெறியும், வேதச் சடங்குகளைக் கண்டிப்பதே. சங்கரர் ன்ம அறிவே அறிவுநெறி என்ற தம் கொள்கையை நாட்டியதுடன், வேதநெறி அறிவற்றவர்களுக்கே தகுந்த கீழ்த்தர நெறி என்று அதனை ஒதுக்குகிறார். மேலும் சமயம் (தர்மம்) என்பதுகொல்லாமை (அஹிம்சை)யே என்று தெளிவாகவும் அவர் கூறியிருக்கிறார். வேதாந்த நெறியின் இன்னொரு கிளை யினைத் தோற்றுவித்த இராமனுஜரும், அருள்நெறி (பக்தி) யையே உயர்வாகக்கொண்டு வேதநெறி வீடுபேற்றுக்கு உகந்ததன்று என்று விளக்குகிறார். வேதாந்தத்தில் மூன்றாவது கிளையான இருபொருள் நெறி(துவைதம்) கண்ட மாதவரும் உயிர்ப்பலியைக்கண்டித்து, அதனிடமாக மாவாலான உருவங் களையே பலியிடும்படி தூண்டினார். இதுவும் தம் சீடரிடையே பிற்போக்காளர்களுக்கு மனநிறைவு ஏற்படுத்து வதற்காகவே யன்றி வேறன்று. இவ்வெல்லா நெறிகளுக்கும் தாயகமான உபநிடதங்களும், அக அறிவு (ஆத்மவித்யா) மட்டுமே உயர்வுடையதெனப் பாராட்டி உயிர்க் கொலையை மறுக்கின்றன.

இந்திய நெறிகளனைத்துமே கொல்லாமையை மேற் கொள்ளுகின்றன. ஆதலின், சமணர் கொல்லாமைக் கோட் பாட்டின் சிறப்பு என்ன என வினவலாம். இதற்கு விடை யளிப்பது எளிதன்று. ஏனெனில், சமண சமயத்துக்கும் பிற இந்திய சமயங்களுக்குமிடையே, இவ்வகையில் காணப்படும் வேற்றுமை, கொள்கை வேற்றுமையன்று. கொள்கையைக் கடைப்பிடிக்கும் உறுதியும், தளரவிடாததூய்மை யுணர்ச்சியு மட்டுமே சமணரைத் தனிப்படுத்துவது. இந்தியப் பண்பாடு களின் பெருந் தொகுதியாகக் கருதப்படுவதும் அதே சமயம் அவற்றின் முரண்பாடுகளுக்கும் கண்ணாடியாக விளங்கு