பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

அப்பாத்துரையம் - 28

வதும் ஆன, மகாபாரதம் கொலையையும் புலாலுண்ணலை யும் பெரிதும் கண்டித்துரைத்தபின், அதனை யடுத்தாற் போலவே இவ்வொழுங்குக்கு விலக்குகளாக (வழுவமைதி களாக)அவற்றிற்கு மாறுபட்ட பல செயல்களுக்கும் இணக்கம் தருகிறது. சமணர் கொல்லாமை பேசுவதுடன் அமையாது, அதனை வலியுறுத்தியும், அதன் உறுதியினின்று இம்மியும் விலகாதும் நிற்க, வேதநெறியும் அதனைப் பின்பற்றிய பிறநெறிகளும் விலக்குகளால் அதன்பிடிப்பை முற்றிலும் தளர்த்தியதன் பயனாகவே தான், பிற்காலத்தில் பாமர மக்கள் எளிதில் சமணசமயம் நீத்து, அவற்றை ஏற்றனர். சமணரின பிடிவாத உறுதியால் நெருக்குண்டு அடக்கிக்கிடந்த இன்ப விருப்புடைய மக்கள், அப்பிணியைத் தளர்த்தும் நெறியை அவாவுடன் ஏற்றனர்.

ஆயினும், தேவாரத்தின் ஒவ்வொரு பதிகத்திலும் புத்தருடன் சமணரையும் சேர்த்து வசைபாடும் சம்பந்தர் வசைச்சொற்களை ஊன்றிக் கவனித்தால், அவ்வசையிலும் சமணசமயத்தின் “அடிப்படை உயர்வு விளங்காமலிராது. இரு சமயத்தாரையும், அவர் பண்புகளையும் அவர் தனித்தனி வேறுபடுத்தி விளக்கியிருக்கிறார். "சமணத் துறவி உலக வாழ்வை முற்றிலும் துறந்து, உடையையும் துறந்து நக்கரா (நிர்வாணரா) ய்த்திரிவர்," புத்தத் துறவி காவி உடை போர்த்தித் திரிவர். சாக்கிய (புத்த) முனிவர், சுரக்குடுக்கை ஏந்தி இல்லறத் தாரிடமிருந்து கஞ்சியும் சோறும் பெற்றுண்பர்; சமணத் துறவியோ ஒன்றுமின்றி, மயிற்பீலிமட்டும் கொண்டேகுவர். புத்தபிக்கு (பிக்ஷு)தமக்கெனப் பிறர் எழுப்பிய அழகும் ஆடம்பரமும் மிக்க மடங்களில் (விஹாரங்களில்) சொகுசாக வாழ்வர்; திகம்பரர் (சமணத் துறவியர்) இயற்கையின் கொடுமை கள் முற்றும் தாங்கி; வெளியிடத்தே நோன்பு (விரதம்)கிடந்து தவமேற்கொள்வர்” ஓரிடத்தில் சம்பந்தர், புத்தபிக்கு ஊனுணவின் சுவையைப் புகழ்ந்து பாடுவர்; சமணமுனியோ அதனைப் பழிச் செயல் (பாவம்) என ஒதுக்குவர் என்றும், எளிதில் மீன் பெற்றுய்யுமாறு புத்தர் கடற்கரையிடத்தே தங்குவர். சமண முனிவர் தவத்தின்பேரால் மலைப் பாங்குகளில் கடுவெயிலில் கிடந்துழல்வர்’ என்றும் கூறுகிறார்.