பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

21

இங்ஙனம் புத்தசமயம், பிற்கால இந்திய நெறியினும் மிகுதியாகப் புத்தநெறியினின்று அடிப்படைக் கொள்கை யில் மாறுபட்டிருந்தும், பிற்காலப் புது வைதீகநெறி நின்ற சம்பந்தர் போன்றவர், வேதநெறியின் எதிரிகள் என்ற முறையில் இரண்டையுமே ஒருங்கே எதிர்த்தனர். இதற்குக் காரணமில்லாம லில்லை. வேத (இந்து)ச் சடங்குகளைப் புத்த சமயத்தினரைவிடச் சமணர் ஒழிக்கத் தக்கவர் என்பதற்கு அவர் கூறும் காரணம் இது ஒன்றே."சமணர்கள் வேத வேள்வியை என்றும் பழிப்பவர். பார்ப்பனர் பயிலும் வேதங்களையோ, அவற்றின் அங்கங் களையோ அவர்கள் பயில்வதில்லை. வேதநெறியையும் வேதச் சடங்குகளையும் மறுப்பதையே அவர்கள் தொழிலாகக் கொண்டார்கள். ஆகவே அவர்களை அழித்தே தீரவேண்டும்" என்று அவர் அறைகிறார்.

வணங்கா முடியுடன் கொல்லாமை வழி சமணர்போல் நிற்பது நன்றா, அல்லது தத்தம் நலம்பேணிச் சூழ்நிலைக்கேற்ப அதனைத் தளர்த்துவது நன்றா என்பது ஆராய்ந்து முடிவுபடுத்த வேண்டிய செய்தி, நீலகேசி இவ்வகையில் சமண மரபுப்படி அதனையே உயர் நெறியாகத் தீவிரமாகக் கொண்டு

வாதாடுகிறாள்.

சமணசமயமும் வேள்விகளும்

தேவார முதலிய பிறசமய நூல்களில், சமணரைப் பற்றிக் கூறப்படுபவற்றைக்கொண்டு மட்டுமே சமணசமயப் பண்புகளை மக்கள் பெரிதும் மதிப்பிட்டுவிடுகின்றனர். சிறந்த ஆராய்ச்சி யாளர்கூட, இந்தியர்மட்டுமன்றி மேல்நாட்டவருங்கூட, இவ்வகை மதிப்பீட்டின் காரணமாகச் சமண சமயத்தைப் பற்றித் தப்பும் தவறுமான கருத்துக்கள் கொண்டுவிடுகின்றனர். இதனால் பழங்கால இந்திய வரலாற்றின் ஒரு பெரும்பகுதி ய வழுநிறைந்து காணப்படுகிறது. இத் தப்பெண்ணங்களுள் முதன்மையானது, வேதவேள்விகள் மீது சமணர் கொண்ட தாடர்பே.சமணத் துறவிகள் வேத வேள்விகளை ஒறுத்தனர் என்பதனால் அவர்கள் தம் இல்லறத்துத் தோழர்களை, வேள்வி களையும் சடங்குகளையும் முற்றிலும் ஒதுக்கிவிடும்படி கூறினர் என்று கருதப்படுகிறது. ஆகவே ஏதேனும் ஒரு நூலில்