பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

23

வேண்டும். அந்நிலையில் அவை பெரு நோன்புகள் (மகாவிரதங்கள்) எனப்படும். இல்லறத்தார் அவற்றைச் சூழ்நிலைக்கு ஏற்ற அளவு படிப்படியாகப் பயில்வர். இந் நிலையில் அதே நோன்புகள் துணை நோன்புகள் (அணு விரதங்கள்) எனப்படும்.

சமணர் சமயத்தில் துறவறம் இல்லறத்தின் பழுத்த முடிவு. ஆனால் துறவறத்துக்கான இன்றியமையா முதற்படி என்ற முறையில் இல்லறம் அதனுடனொத்த மதிப்புப் பெறுகிறது. இப்பாகுபாடே இன்று வைதிகர் தாம் மேற்கொள்வதாகக் கூறும் வகுப்புத்தரநிலை (வர்ணாசிரம) நெறியாகும். வைதிக நெறியின் வரலாற்றில், தொடக்கத்திலிருந்தே உபநிடதங்களும், சங்கரர், ராமானுசர் முதலிய தலைவர்களும் இவ்வகுப்பு நெறி, பிறப்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதை எதிர்த்துள்ளனர். ஆயின் அவர்கள் எதிர்ப்பனைத்தும் விழலுக்கிறைத்த நீராய்விட்டது. சமண நெறியிலோ வகுப்புத்தரநிலை பிறப்பு வேற்றுமையுடன் குழப்பப்படாமல் தொடக்க முதல் இன்றளவும் தூய்மையாக காக்கப்பட்டு வருகிறது.

சமய மாறுபாட்டைச் சமணநெறி தங்கு தடையின்றி வரவேற்றதன் காரணமாக, எல்லா வகுப்பினரும் சமண நெறியில் சேர்ந்தனர். ஆனால் சேர்ந்தபின் அனைவரும் கொல்லாமை மேற்கொண்டு ஒரு நெறிப்பட்டுப் படிப் படியாக வேற்றுமை களைந்தனர். ஆயினும் உயர்வு தாழ்வற்ற நிலையில் வகுப்புகள் தனித் தியங்குவதை சமண நெறி தடுக்கவில்லை. புத்தநெறிபோல் சமணநெறி இந்தியாவில் முற்றும் அழிக்கப்படாமல் நிற்பது இவ்வொரு காரணத் தாலேயே போலும்! சமயத் துறையில் வைதிகநெறியிலும் தீவிரமான சமணம் வைதிக நெறிபோல் இந்தியாவில் பரவா மலும், புத்த நெறிபோல் உலகில் பரவாமலும் இருந்தாலும், வாழ்வியல் (சமூகத்) துறையில் கொண்ட இந் நெகிழ்ச்சி யினால் இந்தியாவில் மட்டும் அழியாது நிலவிற்று.

சமண வகுப்பு நெறி, பிறப்புப்பற்றியதன்று என்பதை நீலகேசி நன்கு விளக்குகிறாள். அவள் தாசப் பெண் (சூத்திரப் பெண்) ஆதலால், வேதங்கள் பற்றிப் பேசவும் தகுதியற்றவள் என்று வேதவாதிகூறும்போது, அவள் உணர்ச்சி ததும்ப வைதிக நூல்களில் கவனிக்கப்படாது கிடக்கும் மேற்கோள்களையே