பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

அப்பாத்துரையம் - 28

காட்டி, அவனைக் கலங்கவைக்கிறாள். மாபாரத முதலிய வைதிகநூல்களில், எக்குலத்தாரும் தகுதி பற்றி முனிவராவதையும், வேத முனிவர்களே பல வகுப்பினரா யிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறாள். உண்மை யில் சமணர்கள் வைதிகர்களுக்கு எதிரிகளேயன்றி, வேதங்களுக்கு எதிரிகளல்லர். வேதங்கள் தேவமொழி என்பதை அவர்கள் ஏற்கவில்லை. ஆனால் பெரியார் வேதங்கள் உண்மையில் கொல்லாமை நெறியையே அடிப்படை யாகக் கொண்டவை என்றும் அவர்கள் கொள்கின்றனர்.

உபநிடதங்களிலேயே இக் கருத்து வலியுறுத்தும் கதை ஒன்று கூறப்பட்டிருக்கிறது. வேள்வியில் தேவர்களுக்கு அளிக்கப்படவேண்டுவதாகக் கூறப்படும் 'அஜம்' என்பது ஆட்டைக் குறிப்பதா? அன்றா? என்று கருத்து வேற்றுமை வைதிகரிடையேயும் அன்றிருந்ததென்பதைக் காட்டுகிறது. அதன் பொருள் ஆடுதான் என்று தன் மனச் சான்றுக்கொவ்வாது கூறிய அரசன் பழி எய்துவதாக உபநிடதங்கள் கூறுகின்றன.

சம்பந்தர், சமணர் 'வேத வேள்வியை நிந்தனை செய் துழல்பவர்' என இழித்துக்கூறினும், முன்பு சமணராயிருந்த வரான அப்பர் அதனை எதிர்த்தனரேயன்றி, அதன் அடிப்படைக் கோட்பாட்டை என்றும் இழித்துரைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சமணர் கொல்லாமை நெறியை ஆதரித்து அவரும் “தயாமூலத் தர்மத்தை”ப் பாராட்டுகின்றனர்.

இன்று வைதிக (இந்து) இந்தியாவில் ஏற்பட்டுள்ள விழிப்பும், நறுமலர்ச்சியும் சமணர் நெறிக்கு ஊக்கமளிப்பவை, காந்தியடிகள் கொல்லாமைக்குப் புத்துயிர் அளித்து வரு கின்றனர். வைதிகர் மேற்கொள்ளும் வேத உபநிடதங்களின் அடிப்படைக் கொள்கைகளைப் பல இக்கட்டுக்களிடையேயும் தூய்மைகெடாது காத்துவரும் சமணர் நெறி, இத்தறுவாயில் இந்தியருக்கும் உலக மக்களுக்கும் வழிகாட்டியாயும், ஒற்றுமைப்படுத்தும் உயர் ஆற்றலாயும் விளக்கவல்லது. எல்லாச் சமயங்களுக்கும் தனிப்படக் கூறுவதானால், கிருஸ்தவ சமயத்துக்கும் அடிப்படைக் கொள்கையாக விளங்குவது அன்புநெறி. அதற்கும் அடிப்படையான கொல்லாமை நெறியை வழுவறக் காத்து நிற்கும் சமணநெறி சமயத்தவர், தொகையில் சிறிதாயினும் தொண்டால் பெரிதாகவல்லது. வ்வகை உயர்வுக்கு இந்தியப்பரப்பு எழுமாக!