பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமயபேத விளக்கம்

மடலம் (2)

'நீலகேசி'யில் பல சமய வகைகளின் கோட்பாடுகளும் சமணசமயக் கோட்பாடுகளோடு ஒப்பிட்டு ஆராயப்படு கின்றன. நூற் குறிப்புக்களிலிருந்து அவ்வச் சமயக் கோட் பாடுகளை ஒழுங்கு படுத்தித் தொகுப்பது நூலை உணர்வ தற்கு மட்டுமன்றி, அந்நாளைய சமய வளர்ச்சி நிலையை அறிவதற்கும் பெரிதும் உதவும். எடுத்துக் காட்டாகப் பூத வாதம் அல்லது சாருவாகம் என்ற சமயமும், சாங்கிய சமயம், பிற்கால நூல்கள் குறிப்பிடும் நிலையிலிருந்து மிகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. நூலாசிரியர் காலத்தில் அவை முதிராப் பருவத்திலிருந்தனவாதலாலேயே, இவ்வேறுபாடு காணப்படுகிறது என்பது பின்னர்க் காட்டப்படும்.

மற்ற எல்லாச் சமயங்களையும் அலசிப் பார்ப்பதற்கும், அவற்றைக் கண்டித்தபின்னர் மெய்ந் நெறியெனத் தோல்வி யுற்றாருக்கு எடுத்துக் காட்டுவதற்கும், நீலகேசிக்குப் பயன் படும் சமயம் சமண சமய மாதலால், அதன் கோட்பாடு களையே முதலில் விளக்குவோம்.

1. சமண சமயக் கோட்பாடுகள்

உலக வாழ்வு துன்பம் நிறைந்தது. துன்பத்திற்குக் காரணம் தீவினை. அதன் காரணம் அவாக்கள். அதிலிருந்து விடுபட அருமருந்தாவது அருகன் தாள்கள். அதனை அடையும் வகைகள் சிநபகவானால் வகுக்கப்பட்ட அறநெறி.

உலகத் தொகுதி (சம்சாரம்) மேல் உலகு, நடு உலகு, கீழ்உலகு என, மூன்று பாகுபாடுகளை உடையது. கீழ் உலகு என்பது ஒன்றின் கீழ் ஒன்றாய் அமைந்த ஏழு நரகங்களை உடையது. தீவினைப் பயன் நுகர்வோர், இதில் சென்றழுந்தித் தீவினைப்