பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

அப்பாத்துரையம் - 28

பயன் அகன்ற பின், மீண்டும் நடு உலகிற் பிறப்பர். ஏழு நரகங்களுக்கும் கீழாக நிகோதம் என்ற மீளா நரகு ஒன்று உண்டு. உய்தி வழியற்ற தீவினையாளர் சென்று, மீளாத் துயரடைந்தழுந்து மிடம் இது.

மேலுலகுதேவரகளிருப்பிடம்.

நல்வினைப்பயனை,

உயிர்கள்,தேவர்களாக நின்று நுகரும் இடம்இது.நல்வினைப் பயன் தீர்ந்ததும் தேவர்களும் அதினின்று நீங்கி நடுஉலகு வரவேண்டியது தான். ஆகவே, உண்மையில் இது நடு உலகை விட மதிப்புக் குறைந்ததே.

ரு

இரு விளைகளுக் கீடானதும், அவற்றினின்று விலகி வீடு பெறும் வாய்ப்பளிப்பதும் நடு உலகேயாம். இதிலும் அவ்விடுதலைக்கான சுற்றுச்சார்புகளுடைய இடம் வினை நிலம் (கர்மபூமி) எனப்படும். இந்தியா அத்தகைய வினை நிலம் ஆகும்)

நடு உலகே ஆறறிவுடைய மக்களுக்கும் ஐயறிவுடைய மாக்களுக்கும் இருப்பிடமாவது. ஐயறிவுயிர்களும் ஓரறிவு முதல் ஐயறிவு ஈறாகப் பலபல படிகளாக வகுக்கப் படும். (இப்பாகுபாடே தொல்காப்பியத்திலும் குறிக்கப் படுகிறது) மண், புனல், அனல், காற்று, வெளி ஆகிய ஐம் பூதங்களிலும் கண்ணுக்குத் தெரியாது அணுவுருவில் உள்ள ஓரறிவுயிர்கள் பல உள. (தற்கால அறிவியலார் கூறும் அணுவுயிர்கள் இவை)

சிந பகவான் வீடுபேற்றிற்குக் கருவியாகிக் காட்டிய நெறிகள் மும்முணிகள் எனப்படும். அவை நன்ஞானம் நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவை ஆம். இவை அனைத்துக்கும் அடிப்படையானது அருள் அல்லது எல்லா வுயிர்களிடமும் கனிவுடைமை ஆகும்.

சமண நெறியின் அடிப்படை மெய்ந் நிலை (தத்துவங்க ளாக மொக்கல வாதத்திற் கூறப்படுவன, இயக்கம் (தர்மம்) நிலை (அதர்மம்), காலம், வெளி (ஆகாசம்), உயிர் (ஜீவன்), பருப்பொருள் (புத்தலம்), நல்வினை (புண்ணியம்) தீவினை (பாபம்) கட்டு (பந்தம்) வீடு (மோக்ஷம்) என்னும் பத்துமாம். இவற்றுள் முதல் இரண்டும் ஒன்றுக்கொன்று மாறாயினும், ஒரே உலகின் இருதன்மைகளைக் கூறுபவையாம். இந்நாட்டில் எழுந்த சமயங்களில் (மேல்நாட்டில்