பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

27

எழுந்தவற்றில் கூட) பல உலகை முற்றிலும் இயக்கச் சார்பாகவும், முற்றிலும் நிலைச்சார்பாகவும் கொண்டு அல்லற்படுகின்றன. உலகு முற்றிலும் இயக்கச் சார்பானால், பொருள்களில் மாற்றத் துக்கு மட்டும் வழி உண்டு. தொடர்ச்சிக்கு வழியில்லை. முற்றிலும் நிலைச்சார்பானால் தொடர்ச்சி உண்டு. ஆனால் மாற்றம், வளர்ச்சி, உயிர்வாழ்வு ஆகியவற்றுக்கு இடமிராது. சமண சமய மொன்றே உலகத் தொகுதியின் அடிப்படை மெய்ம்மை, நிலையுடைமையென்றும், அதனுள்ளீடாக உடனாகவே இயக்க முடைமையும் உண்டு என்றும் கொள்கிறது. (தற்கால அறிஞர் ஈன்ஸ்டீனின் ‘தொடர்பு இயல்' கோட்பாட்டுடன் இது மிகவும் ஒப்புடையதாதல் காணலாம்.)

இது போலவே சம மெய்ந்நிலை விளக்கம், பொருளும் பண்பும் வேறெனவும் கொள்ளாது, ஒன்றெனவும் கொள்ளாது. பொருண்மையில் ஒன்று, தன்மையில் வேறு என்ற ஒற்றுமை யில் வேற்றுமைக் கொள்கை (பேதாபேதவாதம்) கொள் கிறது. ஆகவே தான் நிலை நிலையாமை, உண்மை, இன்மை, ஒற்றுமை வேற்றுமை முதலிய மாறுபடு தொடர்கள் மெய்ம்மையின் இரு தன்மை விளக்கச் சமண அறிஞரால் வழங்கப்படுகின்றன.

காரணமும் காரியமும் ஒன்றெனச் சிலரும் (சத்காரிய வாதம்) வேறு எனச்சிலரும் (அசத்காரிய வாதம்) வாதிப்ப, சமணநெறி ஒன்று எனின் வேறு என்று கொள்கிறது. று (சதசத்காரிய வாதம்)

பொருள்களின் மெய்ம்மையை உணரும் வகைகளைச் சமணநெறி நான்காக வகுத்துள்ளது. அவை, பெயர் (நாமம்) உரு (ஸ்தாபனம்) பொருண்மை (திரவியம்) செயல் (பாவம்) என்பவை.

இந்திய சமயங்களெல்லாவற்றுக்குமே கொல்லாமை அடிப்படை யுண்மையாயினும், சமணம் ஒன்றே அதை ஐயம் திரிபன்றி முழுவலிவுடன் மேற்கொள்வது, வேத நெறியாளர் வேள்வியில் கொலை ஏற்றனர். சமணர்கள் கொள்கையின்படி, தொடக்கக் காலத்தில் வேதங்கள் கொல்லா நெறியின்பாற் பட்ட வேள்விகளே செய்தன. அவ்வளவில் சமணரும் வேதங்களை ஏற்கவே செய்தனர். ஆனால் பிற்காலத்தவர்