பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

29

புத்தர் பிரானால் அருளிச் செய்யப்பட்ட வாய் மொழி களான பிடகங்கள் மூன்று. அவை சுத்த பிடகம் (சூத்ர பிடகம்) வினய பிடகம், அபிதம்ம பிடகம் (அபிதர்ம பிடகம்) என்பன.

புத்த நெறிப்படி, உலகில் மெய்ம்மையான பொருள்கள் அடிப்படைப் பொருள்களான ஐந்து கந்தங்களே. (ஸ்கந்தங்கள்) அவையன்றி உயிர் என்றே ஒன்று இல்லை; உலகு நிலையுடையதல்ல; காலம் என்ற ஒன்று கிடையாது. நொடிகள் மட்டுமே உண்டு. எனவே கந்தங்களும் நிலையானவையல்ல. கணந்தோறும் அழிந்து மறுகணத்தில் புதிதாகத் தோன்றுவன. காரண காரியத் தொடர்போ, பொருண்மைத் தொடர்போ அவற்றிடையே இல்லை. அதாவது, பொருள் ஒன்று இருப்ப தாகத் தோற்றுகிறதே யொழிய, உண்மையில் கணம் தோறும் வேறுவேறு பொருள்கள் மாறி, ஒரே பொருள் போல் தோற்று கின்றது என்று புத்தர் கொள்கின்றனர். ஆற்றில் ஒரு கணம் உள்ள நீர் மறுகண மாறினும், ஒரே ஆற்றைப் பார்ப்பதாக நாம் எண்ணுவது போல, உலகத்தோற்றமும் மாறாதிருப்பதாகத் தோற்றமளிப்பது மயக்கமே என்பர்.

ஐந்து கந்தங்களாவன: உருவகந்தம் (ரூபஸ்கந்தம்) உணர்ச்சிக் கந்தம் (வேதனாஸ்கந்தம்) அறிவுக் கந்தம் (விஜ்ஞானஸ்கந்தம்) பெயர்க் கந்தம் (ஸம்ஜ்ஞாஸ் கந்தம்) செயற்கந்தம் (ஸம்ஸ்கார ஸ்கந்தம்) என்பவை.

உருவக் கந்தத்துள் எட்டினம் (அஷ்டகம்) என்றழைக்கப் படும் எட்டு வகை உலகப் பொருள்கள் அடங்கும். அவை மண், நீர், காற்று, தீ என்னும் மூலப் பொருள்களும், அவற்றிற்கிணை யான நிறம், சுவை, மணம், ஊறு ஆகிய புல உணர்ச்சிகளும் ஆகும். இவை எட்டும் ஒருங்கு கூடியே எட்டினம் அல்லது பொருளாகத் தோன்றும். இவையன்றி மண்ணுக்குத் திட்பமும், நீருக்கு நெகிழ்ச்சியும், தீக்கு வெப்பமும், காற்றுக்குச் சுழற்சியும் தன்மைகளாம். பொருட்பண்புத் தொடர்பைப் புத்தர் ஏற்ப தில்லையாதலால், அவை பண்பாக மாட்டா.

உணர்ச்சிக் கந்தம் இன்ப உணர்ச்சி, துன்ப உணர்ச்சி, சமனுணர்ச்சி என மூவகை. அறிவுக் கந்தம்; ஐம்புல அறி