பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

அப்பாத்துரையம் - 28

வுடன் மன அறிவும் கூடியது. செயற் கந்தம் மனமொழி, மெய்ச் செயல், உள் என மூவகைப்பட்டது. நன்மை தீமை எனவும் இம் மூன்றும் பின்னும் பகுக்கப்படும்.

தீச்செயல்களுள் கொலை, களவு, காமம், உடல் பற்றியவை; பொய், கோள், கடுஞ்சொல், பயனில் சொல் நாலும் மொழி பற்றியவை; அவா, வெகுளி, மயக்கம், மனம் பற்றியவை.

கொல்லாமையை

உயர்வுடையதாகக்

புத்தசமயம் கொண்டது. ஆனால், ஊனுண்ணல் கொலையின் பாற்படா தெனப் புத்த நூல்கள் வாதித்தன. கொலை தீவினையாக வேண்டு மானால்,கொலைக்காளான பொருள் உயிர் உடையதாயிருத்தல் வேண்டும்.உயிருடையதெனக், கொல்பவர் உணர்ந்திருத்தல் வேண்டும். கொல்லும் எண்ணம் வேண்டும்; கொலைச் செயல் வேண்டும்; பொருள் உயிரிழத்தல் வேண்டும் என்று ஐந்து கூறுகள் நிறைவேறுதல் வேண்டும்.

புத்தர்கள் கோட்பாடுகளைச் சுருக்கிக் கூறும் நான்கு பெருவாசகங்கள் உள. அவை யாவும் துன்பம், (சர்வம் துக்கம்) யாவும் தூய்மை யற்றவை, (சர்வம் அசுசி) யாவும் அழிபவை, (சர்வம் அநித்தியம்) யாவும் உயிரல்லாதவை (சர்வம் அனாத்மா) என்பவை.

சமணர் பொருண்மையறியும் வழிகளாகக் கொண்ட பெயர், உரு, பொருண்மை, செயல் என்ற நான்கில், புத்தர் செயல் ஒன்றே ஒத்துக்கொண்டனர்.

(புத்த சமயம் இறைவன், உயிர், பொருள் மூன்றையும் மறுத்து, எல்லாம் மாற்றம், தோற்றம் என வாதித்தது. அது மாயாவாதத்தின்பாற்படும்)

3. ஆசீவக நெறி

நீலகேசியில் காணப்படும் ஆசீவகக் கோட்பாடுகளைப் பற்றிக் கூறுமுன், அதன் வரலாறுபற்றிச் சிறிது கூறவேண்டும். இதனைத் தோற்றுவித்த முதல்வராகிய மஸ்கரி என்பவர் புத்தர், மகாவீரர் (சிநர்) ஆகியவர் காலத்தவரே. புத்த நூல்கள் அவரை முகலி புத்தர் என்றும், புத்தர் காலத்து எட்டுச் சமயத் தலைவர்களுள் ஒருவராகவும் குறிக்கின்றன. அறிஞர்