பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

31

ஹேர்ன்லே, சமய ஒழுக்கத்துறைப் பேரறிவுத் தொகுதியில் (Dr Hoernle in Encyclopaedia of Relegion and Ethics) அவர் மகா வீரரை மீறித் தனிச் சமயம் ஏற்படுத்திய மாணவர் என்று குறிக்கிறார். அவர்கள் ஏகதண்டிகள் என்றும், மஸ்கரியர்கள் என்றும் ஜாதகங்களில் (புத்தர் பிறப்புக் கதைகளில்) குறிப்பிடப் பட்டனர். ஆஜீவகர் என்ற பெயர், பிழைப்புக்காக வேடமிட்டவர் என்ற பொருளில், மாற்றார் ஏளனமாக வழங்கிய பெயரே யாகும்.

பிற்காலத்தார் ஆசீவகர் திகம்பர சமணரின் ஒரு பகுதி என வெளித் தோற்றத்தால் மயங்கினர். புத்த நூல்கள் ஆசீவகர் என்ற பெயருடன் அவர்களைக் குறிக்காவிடினும் அவர்களைச் சமணர் என்று கூறவில்லை. புத்தரும் மகாவீரரும் மஸ்கரியின் ஒழுக்கக் கேட்டை ஒருப் போலவே கண்டித்துள்ளனர். அறிஞர் ஹேர்ன்லே திகம்பர சமணருக்கும், ஆசீவகருக்கு மிடையிலுள்ள கொள்கை வேற்றுமைகளையும் எடுத்துக் கூறுகிறார்.

று

கயாவின் பக்கத்தில் பர்பரிக் குன்றுகளின் குகைகளிலுள்ள அசோகர் கல்வெட்டுக்களிலொன்று, அக்குகை பியதாஸியால் (அசோகரால்) ஆசீவகர்களுக்காக விடப்பட்டது என்று குறிக்கிறது. இவ்விடத்தில் பார்ப்பனர், நிகண்டர் (சமண திகம்பரர்) ஆசீவகர் என, ஆசீவகர் தனிப்படவே குறிக்கப்படுகின்றனர். கி.பி.6 ம் நூற்றாண்டினரான வராகமிசிரர் தம் பிருகத் ஜாதகத்தில் அக்கால ஏழுவகைத் துறவிகளுள் ஒருவகையாக ஆசீவகரைக் குறிக்கின்றனர். அவ்வேழுவகையினர், சாக்கியர், ஆசீவகர், நிகண்டர், தாபதர், பிக்குக்கள், விதூடகர், சரகர் என்பவர். வராகமிஸிரரின் உரைகாரரான படோட்பலர் ஆசீவகர் அல்லது ஏகதண்டிகள் நாராயணனை வணங்கு பவர் என்று தெரிவிக்கிறார். நீலகேசியும் இங்ஙனமே குறிப்பது கவனிக்கத் தக்கது. எனவே, சில வெள்ளணி (சுவேதாம்பர) சமண நூல்களைப் பின்பற்றி ஆசீவகர் திகம்பர சமணவகையினரே என்று அறிஞர் ஹேர்னிலே கூறுவது பொருத்தமற்றது.

வெள்ளணியர் (சுவேதாம்பரர்) கூறும் வேறு சில செய்தி களையும் அறிஞர் ஹேர்னிலே ஆராயாது ஏற்கிறார். மகா வீரருக்கு முந்திய தீர்த்தங்கரரான பார்சுவநாதர் கொல்லாமை, மெய்ம்மை கூறல், திருடாமை, உடைமைகொள்ளாமை ஆகிய நான்கு நோன்புகளையே வலியுறுத்தினர். மகாவீரர் நிறை