பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 28

32 ||-. யுடைமை (பிரமசரியம்) என்பதையும் உட்படுத்தினார். இது ஒருவகையில் உண்மையேயாயினும், து வலியுறுத்து முகத்தினால் அன்றி வேறன்று. முதல் நான்கிலும் இது தொக்கதாகவே முதலில் கொள்ளப்பட்டது.

ஆனால்

பார்சுவநாதர், துறவியர், ஆடையோ கௌபீனமோ வைத்துக்கொள்ள இணங்கியதாகவும், மகாவீரரே முதன் முதலில் அதனையும் ஒறுத்ததாகவும் வெள்ளணியார் கூறுகின்றனர். மகாவீரரின் மாணவரான கோசல மொகல புத்திரர், இதனை ஏற்காது பிரிந்து நின்றார் என்பதை அறிஞர் ஹெர்ன்லே நம்புகிறார். ஆனால் வெள்ளணியினர், திகம்பரர் வேறுபாடு மகாவீரர் காலத்துக்குச் சிலகாலம் பிந்தியே ஏற்பட்டது என்று, வரலாறு கூறுவதை அவர் கவனிக்க வில்லை. திகம்பரர் சாவகர் (தொடக்கத் துறவி) களுக்கே கௌபீன உடுக்கையை ஏற்றனர்.

சமணர் அல்லாதார் பலர் குறிப்பிடும் நிகண்டரும், புத்தர் குறிப்பிடும் அசேலகரும் திகம்பரச் சமணரேயன்றி ஆசீவகர் அல்லர்.

தென் இந்திய சோழர் 13 - ம் நூற்றாண்டு கல்வெட்டுக் களில் குறிக்கப்படும், ஆசுவக் கடமை என்பது, ஆசீவகர் மீது இட்டவரி என்று அறிஞர் ஹேர்னிலே கூறுவதும், இத் தப்பெண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட ஊகத்தா லேயே யாகும். ஆசுவக் கடமை என்ற தொடர் வருமிடங்களி லெல்லாம் முன்னும் பின்னும் வாணிகம், தொழில் ஆகிய வற்றின்மீதுள்ள வரிகள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. ஆசு என்பது தமிழில் வார்ப்பு அச்சு எனப் பொருள்படும். வெங்கலத்தில் வார்ப்பட வேலை செய்யும் கன்னார்மீதுள்ள வரியே இது குறிக்கத்தகும் துறவி வகுப்பினர்மீது வரி விதிப்பது முன்பின் பொருத்தமோ இயற்கையோ அன்று.எனவே, தமிழ் நாட்டிலே பிற்காலத்தில் பிற்காலத்தில் (நாயன்மார் காலத் திலும் அதன் பின்னும்) ஆசீவகர் அறியப்பட்டனர் என்பதற் கில்லை. வடநாட்டில் மட்டும் 6-7ம் நூற்றாண்டுகள் வரை அது அழியாது நிலவிற்று.

ஆசீவகர், தம் தலைவரான மஸ்கரி பகவான் நிறை வறிவுடையவர் என்றும், இருவினையற்றவர் என்றும், ஆயினும்