பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

33

செயலற்று வாய் திறவாது வாளாவிருப்பவர் என்றும் கொண்டனர். எனவே, அவர் நிறைவர் (பூரணர்) என்றழைக்கப் பட்டனர்.செயலற்றிருத்தலும், வாய்பேசாததும் நடக்கும்போதும் பேசும்போதும் சிற்றுயிர்களுக்குத் தீங்கு நேரிடும் என்பதற்காகவே என்று அவர்கள் கருதினர்.

ஆசிவகரின் மறைமொழிகள் ஒன்பது 'ஒளிக்கதிர்கள்' எனப் பெயர் பெற்றன. அவை மக்களுக்குப் புகட்டிய மெய்யறிவின் படி உலகப் பொருள்களின் தோற்றமும் மறைவும் காரண மற்றவை (காரணமின்றித் தற்செயலாய் நிகழ்பவை) பருப் பொருள்களை யன்றி மெய்ப்பொருள்கள் இல்லை. அவை உருவம் உடையவை; இடங் கொள்பவை. அவற்றுக்குத் தன்மைகள் உண்டு. ஆனால் பண்புகள் கிடையா. அம்மூல மெய்ப்பொருள்கள் ஐந்து. மண், காற்று, தீ, நீர், உயிர் என்பவை. இவையனைத்தும் அணு உருவுடையவை. நிறம், மணம், ஊறு ஆகிய மூன்றும் மண்ணின் இயல்புகள். நீரின் தன்மை தட்பம், தீயின் தன்மை வெப்பம், காற்றின் தன்மை ஓசை, உயிரின் தன்மை உணர்தல், இவற்றாலாய பொருள்களுக்கு இவற்றின் தன்மையன்றி வேறு பண்பு இல்லை. ஒரு மூலப் பொருளுடன் மற்றப்பொருள் சேர்ந்திருக்குமாயினும், ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றுபடுவதில்லை. கொடிகள் ஒன்றின் பின் ஒன்று வருவதன்றித் தொடர்ச்சியான காலம் என்று ஒன்றில்லை. ஒழுக்கம் என்பது இன்பத்தை நாடுவதே யன்றி வேறெதுவும் அல்ல. (நரகம், துறக்கம், மறுபிறப்பு, தெய்வம், படைப்பு இல்லை என்பது தெளிவு) காரிய காரணத் தொடர்பு கிடையாது. எல்லாம் மாற்றமற்ற ஒரே நிலை. (அவிசலித நித்யம்)

உயிர், உருவமுடைய பருப்பொருள், அதற்கு நீளமும் அகலமும் மட்டுமன்றி 500 யோசனை (5000 மைல்) உயரமும் உண்டு. அது பாலைக் கனிபோன்ற நீலநிறமுடையது. உயிர் கள் எண்ணற்றவை. அனைத்தும் வீடு பெறுதற்குரியவையே. அங்ஙனம் எல்லா வுயிர்களும் வீடடைந்தால் மீண்டும் பிறக்கும். இக்கருத்து ‘மண்டல வீடு' எனப்படும். (மண்டலமோக்ஷம்)

ஐம்பொருள்களுள் தீயும் உயிரும் மேல் நோக்கிச் செல்பவை. காற்று, பக்கநோக்கிச் செல்வது. மண்ணும் நீரும் கீழ்நோக்கிச் செல்பவை.