பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அப்பாத்துரையம் - 28

நோன்புகள் ஒழுக்கமுறைகள் ஆசீவகரால் பாராட்டப்

பட்டன.

4. சாங்கிய வாதம்

நீலகேசி ஆசிரியர் குறிப்பிடும் சாங்கிய நெறிக் கொள்கைகளுக்கும் பிற நூல்களில் குறிக்கப்படும் சாங்கிய நெறிக் கொள்கைகளுக்கு மிடையில், பல வேறுபாடுகள் உள்ளன. நீலகேசியின்படி சாங்கியக் கருத்துக்களை விளக்குமுன், வ்வேறுபாடுகட்குக் காரணமான வரலாற்றுச் செய்திகளை விளக்குதல் வேண்டும்.

தற்கால இந்திய மெய்ந்நிலை விளக்குத் துறைகள் (தரிசனங்கள்) ஆறனுள் (சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை) சாங்கியம் மிகத் தொன்மை வாய்ந்தது. இதன் முதல்வர் கபிலர். இவர் மாபெரு முனிவராக (மஹரிஷி) உபநிடதங்களிலும் மாபாரதத்திலும் குறிக்கப்படுகிறார். அவர் நிறுவிய சாங்கியநெறி, இறையிலி சாங்கியம் (நிரீசுவர சாங்கியம்) எனப்படும். கபிலருக்குப் பின்னர் அசூரி, பஞ்சாஸிகர், விந்தியவாசி, ஈசுவர கிருஷ்ணர் முதலிய பெருந்தலைவர்கள் அதற்கு ஆக்கம் தந்து வளர்த்தனர். ஈசுவர கிருஷ்ணர் எழுதிய சாங்கியக் காரிகையே இன்று சாங்கிய நெறியின் மேற்கோள் நூலாயிருக்கிறது.

ஆனால் நீலகேசியில் குறிக்கப்படும் சாங்கியநெறியி லிருந்து வேறுபடுகிறது. சாங்கிய ஆசிரியராக இங்கே கூறப் படுபவர் பராசரர். நீலகேசி உரையாசிரியரும் இந்நூலில் குறிக்கப் பெறும் சாங்கியம் என்ற பெயரும், பிற்காலத்தில் பதஞ்சலி முனிவரின் யோகநெறிக்கே வழங்கிற்று. இது உண்மையில் இறையிலி சாங்கியத்துடன் கடவுள் கொள்கையையும் வணக்கத்தையும்கூடச் சேர்த்துக்கொண்ட நெறியேயன்றி வேறல்ல. நீலகேசியில் கூறப்படும் சாங்கியம், கபிலர் சாங்கிய நெறியின் மெய்ந்நிலை விளக்கத்துடன் (தத்துவ இறைகள்) கடவுட் கொள்கையையும் பிற்கால வேதாந்த நெறியின் ஆன்ம ஒருமைக் கொள்கையையும் (கேவல அத்வைதம்) சேர்த்துக் கொள்கிறது. எனவே, இது வேதாந்த நெறியின் முதிரா முன்னிலையையே குறிக்கும்.