பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

35

நீலகேசியில் சாங்கிய நெறியின் தலைவர் பெயரும் இடமும் இவ்வகையில் தனிப்பட்ட சிறப்புடையவை. வேதாந்த நெறிக்கு முதனூலாகக் கொள்ளப்படுவது சங்கராசாரியர் பிரமசூத்திர உரையேயாகும். சங்கரர் உரை எழுதுமுன், முதனூல் வியாசரால் எழுதப்பட்டிருந்தது. இவ்வியாசர் பராசரர் மகன். பராசரியர் என்றும் வழங்கப்பெறுவர். அவர் எழுதிய பாரத நூல் அத்தினாபுரியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறுவது. நீலகேசியில் சாங்கிய ஆசிரியர் இருப்பிடம் அத்தினாபுரி என்றும், அவர் பெயர் பராசரர் என்றும் காணப்படுகிறது. பராசரன் என்பது, இங்கே பராசரீயர் என்ற பெயரின் பிழைபட்ட அல்லது மருவிய உருவாயிருத்தல் கூடும். அப்படியாயின், நீலகேசியில் சாங்கியம் என்று வழங்கும் நெறி, வியாசர் பெயரால் வழங்கிய தனி நெறியாயிருத்தல் கூடும். பாரதத்தில் கூறப்படும் சாங்கியக் கொள்கையும், நீலகேசியில் கூறப்படுவதுடன் ஒத்திருப்பதும், சங்கராசாரியரின் சர்வசித்தாந்த சங்கிரகத்தில் இதே தெய்வக் கொள்கையுடையதாக 'வியாச மதம்' என்ற தனிநெறி குறிப்பிடப்படுவதும் அதனை வலியுறுத்தும். சங்கரர் வேதாந்த நெறி எழுந்த பின்னும் இவ்வியாசநெறி சிறப்புடனிருந்திருக்க வேண்டும். நீலகேசி காலத்தில் சங்கரர், இராமநுசர், மாத்துவர் முதலியோர் வகுத்த வேதாந்தக் கிளைநெறிகள் எழவில்லை யாயினும், இவ்வியாச நெறி சாங்கிய நெறியின் கிளை என்ற நிலையில் பயின்றிருக்கவேண்டும்.

ஆனால் கபில மாமுனிவரின் சாங்கியம் (இறையிலி சாங்கியம்) நீலகேசியில் விளக்கப்படாததன் காரணம் யாது? பிற்கால வேதாந்த நெறிகள்போலாது பழமைமிக்க இந்நெறி நீலகேசி காலத்தில் அறியப்படவில்லை என்று கூறுதல்

பாருந்தாது.புத்த சமணநெறிகளுடனொப்பத் தென் இந்தியாவிலும் நிலவியே இருத்தல்வேண்டும். சில அடிப் படை பண்புகளில் புத்த சமண சமயங்கள் ஒத்திருந்தன வாயினும், வேறு சில உயிர்நிலைக் கோட்பாடுகளிலும்

வழ க்கங்களிலும் அ அவை மாறுபட்டிருந்தன. ஆனால் சாங்கியமும், (இறையிலி சாங்கியம்) சமணமும் கிட்டத் தட்ட எல்லா அடிப்படை மெய்ந்நிலை விளக்கக் கோட்பாடுகளிலும் ஒத்திருந்தனவாதலால், மற்றச் சமயங்களையும் சிறப்பாகக்