பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

அப்பாத்துரையம் - 28

கொலை வேள்வியை மேற்கொள்ளும் வேத நெறியையும் எதிர்ப்பதில் அவை ஒன்றுபட்டிருந்தன. இரண்டு சமயங்களும் கொல்லாமை, உயிர்ப் பன்மைக் கொள்கை, இறைவன் படைப்பு மறுப்பு ஆகியவற்றில் உறுதியுடையவையாயிருந்தன. ஆகவே சமணநெறிக்கு எதிரான நெறிகளையே மறுக்க எழுந்த நீலகேசி, அதனை ஏற்குமுறையில் தன் கண்டனங்களுள் அதனை உட்படுத்தாது விட்டிருத்தல் வேண்டும்.

ஈசுவர கிருஷ்ணர் இயற்றிய சாங்கியக் காரிகையின் உரையாசிரியரான மாதரன் கொல்லாமை நெறி நின்று வேள்வி ஒதுக்கினார். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவனை அற வேள்வியினின்று விலக்கியும், கோயில்களில் ‘பூப்பலி’ ஏற்படுத்தியதைப் பாராட்டியும் பேசும் மற்ற மாதரன், இதே மாதரரனாயிராவிடினும், இதேபோல் சாங்கிய நெறி யினனாயிருக்கக் கூடும். மேலும் குணாட்டியர் பிருகத் கதையின் தமிழ்மொழி பெயர்ப்பாகிய பெருங்கதையின் ஆசிரியரும் கதைத் தலைவரும் சமணராயிருந்தும், வாசவதத்தைக்கு ஆறுதலளித்து அறமுரைத்தவள் சாங்கியத் தாய் என்று கூறப்பட்டிருப்பது காண, சமணர் சாங்கியத் துறவியரை மாற்றாராகக் கொள்ளாது, அறத்துறையில் சமணத் துறவி யருடன் ஒப்பாகக் கொண்டவர் என்று கொள்ள இடமுண்டு.

கபிலர் சாங்கிய நெறியும் நீலகேசி, எதிர்க்கும் சாங்கிய நெறியும் வேறெனக் காட்டியபின், நீலகேசியிற் காணப்படும் தெய்வக் கொள்கை சாங்கிய நெறியின் தன்மையை விளக்குவோம்.

(கடவுட்கொள்கைச்) சாங்கிய நெறிப்படி மெய்ந் நிலைகள்(தத்துவங்கள்)25. அவை, உயிர் (ஆன்மா) இயற்கை. (பிரகிருதி) பெருநிலை (மகத்து) செருக்கு (அகங்காரம்) ஐம்புலன்கள் (ஞானேந்திரியங்கள்) ஐம்பொறிகள் (கர்மேந் திரியங்கள்), மனம், தன்மாத்திரைகள் ஐந்து. ஐம்பூதங்கள் ஆகியவை.

உயிர் (ஆன்மா) பொதுவாகப் பண்பும் செயலும் அற்றதாயினும், அதன் முந்நிலைகளான பேருயிர் (பரமாத்மா) உள்ளுயிர்(அந்தராத்மா) வினையுயிர் (கர்மாத்மா) ஆகிய வற்றில் முதலதுமட்டுமே செயலற்றது. மற்ற இரண்டும் செயலுடையவை.