பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

37

பேருயிர் (பரமாத்மா) அல்லது கடவுளே உலகைப் படைத்தது. அதன்முன் உலகில்லை. அதன் செயலூக்கமின்றி எச்செயலுமில்லை. பேருயிர் அனைத்தையும் அழிக்கவும் வல்லது.

பேருயிரின் பிறிதுநிலையே உயிராதலால், உயிர் ஒன்றே.

5. வைசேடிக வாதம்

வைசேடிக நெறியைத் தோற்றுவித்த முதல்வர் கணாதர். நீலகேசியில் வைசேடிக ஆசிரியர் பெயர் லோகஜிதர்.

வைசேடிக நெறியில் முதனிலை பொருள்கள் (பதார்த் தங்கள்)ஆறு. அவை முறையே பொருண்மைகள் (திரவியங்கள்); பண்பு (குணம்); வினை (கர்மம்); தொகை (சாமானியம்); வகை (விசேஷம்); வாய்ப்பு (சமவாயம்) என்பவை.

பொருண்மைகள் என்பது; ஐம்பூதங்கள், திசை, மனம், காலம்,உயிர்(ஜீவன்) என்பன.

பண்பும் வினையும் பொருண்மையுடன் ஒன்றியவை.

தொகை, பெருந்தொகை (மஹா சமவாயம் அல்லது பரசமவாயம்) என்றும், சிறுதொகை (அலாந்தர சமவாயம் அல்லது அபர சமவாயம்) என்றும் இருவகை. பொருள்களில் கண்ட பொதுத் தன்மையே தொகை எனப்படும். எல்லாப் பொருளுக்கும் அடிப்படையான பொதுத்தன்மை (பொரண்மை நிலை)யே பெருந்தொகை. மற்றப் பொதுத் தன்மைகள் சிறு தாகைகள். வகை என்பது பொருள்களிடையே கண்ட வேற்றுமை அல்லது வேறுபாடு. வாய்ப்பு, பொருண்மை யுடன் அவ்வற்றுக்கேற்ற பண்பும் செயலும் கொண்டு கூட்டும் இயல்பு. இவற்றுள் முதல் மூன்று (பொருண்மை, பண்பு, செயல் ஆகிய) தனிப்பொருள் நிலை உடையவை. அவை வாய்ப்பு மூலம் கலத்தலாலே செயலுலகம் உண்டாம். தொகை வகைகள் வாய்ப்புக்கு உதவுவன.

6. வேதவாதம் அல்லது மீமாம்சை

வேதவாதியின் அடிப்படைத் தத்துவம் வேதத்தை ஏற்றுக் கொள்வதே. வேதம் காலம் கடந்தது; ஆக்கிய முதல்வனற்றது; அழியாதது. அதனை அடிப்படையாகக் கொண்டு அதனை