பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

||–

அப்பாத்துரையம் - 28

ஏற்கும் எல்லா வகைப்பட்ட நெறிகளும் சமயமுறைகளும் அதன் கிளைகள். 25 மெய்ந்நிலைகளை (தத்துவங்களை) ஏற்கும் சாங்கியம், 6 முதல் நிலைப் பொருள்களை (பதார்த்தங்களை) ஏற்கும் வை சேடிகம், படைப்புக் கொள்கையை ஏற்கும் படைப்பு வாதம் (சிருஷ்டிவாதம்) கடவுட் கொள்கை உடைய கடவுள் நெறி (பிரம்மவாதம்) ஆகிய கொள்கைகளும், வைணவம், மாகேசுரம், பாசுபதம்,பாஞ்சராத்திரம்,பாரிவிராஜிகம் ஆகிய சமயமுறைகள் யாவும் வேதவாதிக்கு அவன் தலைமை ஏற்கும் கிளைச் சமயங்களாகும்.

கொலை வேள்வி முறை வேதவினைகளின் அடிப்படை (உபரி சர வசுவின் கதை, இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு எதிர்ப்பை விளக்குகிறது) வகுப்பு வேற்றுமை (ஜாதி வித்தியாசம்) அவன் உலகியல் ஒழுக்க முறையின் அடிப்படைச் சட்டமாகும். நீலகேசி வேதவாதத்தை இறைமறுப்பு நெறி (நாஸ்திகம்) என்கிறான்.

7. பூதவாதம்

பூதவாதம் சார்வாகம் என்றும், வோகாயதம் என்றும்

வழங்கும்.

நீலகேசியில் பூதவாதம் விளக்கும் ஆசிரியர் பிசாசகர்.

பொருள்களை யன்றிப் பண்புகளைத் தனிப்பட்டவை யாகப் பூதவாதி ஏற்பதில்லை. அவன் ஏற்கும் மெய்ப் பொருள்கள் ஐம் பூதங்கள் மட்டுமே. அவை தீ, மண், நீர், காற்று, வெளி என்பவை. தீயின் ஆற்றல் கண்ணிலும், செயல் நிறத்திலும் தோற்றும். மண்ணின் ஆற்றல் மூக்கிலும், செயல் மணத்திலும் காணப்படும். இங்ஙனமே நீருக்கு நாவும் சுவையும்; காற்றுக்கு உடலும் ஊறும்; வெளிக்குச் செவியும் ஓசையும் ஆற்றல், சான்ற உறுப்புக்களாகவும் செயல்களாகவும் அமையும்.

பொருண்மை விளக்க வகையில் பூதவாதி ஒண் கூடு (பிரத்தியக்ஷம்) ஒன்றையே விளக்க (பிரமாண) மாகக் கொள்வான்.

ஐம்பூதங்களும் என்று முள்ள மெய்ப்பொருள்கள். அவற்றின் கலப்பே உலகம். அதற்குப்படைப்பு, அழிவு கிடையாது.