பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

39

மா, வெல்லம் முதலிய ஐம் பொருளும் சேர்ந்து மது சாரம் உண்டாவது போல், ஐம்பூதத்தினின்று உண்டாகும் தன்மையே உயிரின் செயல் போலத் தோன்றியது. உண்மை யில் உடலன்றி உயிருமில்லை. முற்பிறப்பு, மறுபிறப்பு என்பதும், மேலுலகு, கீழுலகு, துறக்கம், நரகம், நல்வினை, தீவினை, தவம், ஒழுக்கம் யாவும், பொதுமக்களை மயக்கச் சூழ்ச்சியாளர் ஏற்படுத்திய பொய்மூட்டைகள்.

குறிப்பு: நீலகேசியில் கண்ட பூதவாதத்துக்கும், மாத வாசாரியரின் சர்வ தரிசன சங்கிரகம், சங்கராசாரியரின் சர்வ சித்தாந்த சங்கிரகம் ஆகியவற்றில் கண்ட பூதவாதத்துக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உண்டு. நீலகேசிப் பூதவாதம் ஐம பூதங்களை ஐந்தெனக் கொள்கிறது. ஆனால் பின்னாளில் பூதவாதிகள் நான்கே ஏற்றனர். கண்கூட்டு விளக்கமே ஏற்ற அந்நெறியினர், கண்கூடாக விளங்காத வெளியை நீக்கினர். நீலகேசி காலத்தால் முந்தியதென இச் செய்தியும் காட்டும். மகா பாரதத்திலும் பூதவாதத்தின் முதல்வரான பிரகஸ்பதி ஐம்பூதங்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

கொலை

பூதவாதிகளும், சமணர்களைப் போலக் வேள்விகளை எதிர்த்துக் கொல்லாமையை மேற்கொண்டன ரெனினும், பிற்காலத்தில் இன்பமே அறம் எனக் கொண்டு வேறுபாடுற்றனர். (பிருகஸ்பதிக்குப் பின் ந் நெறியைச் சார்வாகன் புதுக்கி வேறுபடுத்தி யிருக்கலாம்)

மடலம் (3) நூற் சுருக்கம்

பிரிவு (1) தர்ம உரை

பாஞ்சாலம் என்ற நாடு நீர் நிலவளங்கள் நிறைந்தது. அழகிய காட்சிகளை உடையது. அதன் மன்னனாகிய சமுத்திரசாரன், அந்நாட்டின் தலைநகராகிய புண்டர வர்த்தனத்தில் இருந்து செங்கோல் செலுத்தி வந்தான். நகர்புறத்தில் பலாலயம் என்றொரு மயானத்தில் ஒரு காளி கோயிலிருந்தது. அதனருகில் முனிசந்திரர் என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் அந்நகர மக்கள் காளி கோயிலில் பலியிடும் படி எண்ணற்ற ஆடு மாடுகளை ஓட்டி வந்தனர். முனிவர்