பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அப்பாத்துரையம் - 28

கொல்லா நோன்பியாராதலால், அத்தனை உயிர்கள் கொலை செய்யப்பட வருவது கண்டு மனங் கலங்கினார். எனவே, அவர் அம் மக்களைப் பரிவுடன் நோக்கி, "இத்தகை உயிர்களைக் கொல்ல நீங்கள் எதற்காக முனையவேண்டும்? இதனால் நீவிர் அடையும் பயன் என்ன?” என்று வினவினார். மக்கள் அவரைக் கைகூப்பி வணங்கி, "பெரியீர்! எம் அரசன், நெடுநாள் மகவில்லா திருந்து ஒரு மகனைப் பெற்றான். இறைவி அளித்த இப்பெரும் பரிசிற்காக இவ்வுயிர் களைப் பலியாகத் தந்து எம் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து வழிபாடாற்ற வருகிறோம் என்றார்கள்.

66

முனிசந்திரர் 'அன்புடையீர், பிறப்பும் இறப்பும் அவரவர் வினைப்பயனே யன்றி, இறை செயலாகமாட்டா. அப்படியே இறைவன் தலையிட்டு இந் நன்னிகழ்ச்சி ஏற் பட்டதென்று கொண்டாலும் கூட, அதற்காக இவ்வுயிர்களைக் கொல்வது என்ன பயன்தரும். உயிர்க் கொலையால் தெய்வம் சினமடையுமேயன்றி மகிழுமா? உம் நன்றியை எப்படியும் வழக்கம் பின்பற்றித் தெரிவித்தல் வேண்டுமானால், உயிர்களைக் கொல்லாமலே அவற்றைப்போன்ற களிமண் வடிவம் சமைத்துப் பலியிட்டுக் கொள்ளலாமே. அவ்வாறு செய்வதனால் உம் வழிபாடும் குறைவு படாது; இறையும் மகிழும். உங்களுக்கு இத்தனை உயிர்களைக்கொல்லும் பழியும் நேராது. கொல்லாமை சார்ந்த வழிபாடே உண்மை வழிபாடாம்" என நயம்பட உரைத்தார்.

முனிசந்திரர் அறவுரையின் மேம்பாடும், நலமும் உணர்ந்து, மக்கள் அவர் கருத்துக்கிணங்கி உயிர்களைக் கட்டவிழித்து விட்டனர். பின் அவர்கள் களிமண் வடிவங்களா லேயே பலியிட்டுவிட்டு, மகிழ்ச்சியும் நிறைவும் உடையவ ராய் மீண்டனர். ஆனால் காளிதேவி, தன் மக்கள் வழக்க மாகத் தரும் குருதியுணவு பெறாது துயரடைந்தாள். தன் அடியவர்களைத் தன்னிடமிருந்து நயமொழியால் விலக்கிய இம்முனிவனை ஒறுத்துப் பழிக்குப்பழி வாங்கவேண்டுமென்று அவள் உள்ளம் துடித்தது. ஆயினும், யோகத்தில் வல்லனிவரிடம் தன் மாயம் செல்லாது என் உணர்ந்து செயலற்றிருந்தாள்.