பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

41

காளிகளிடையே முடிசூடா அரசியாய் விளங்கியவள் மாகாளி நீலி அல்லது நீலகேசி. அவள் தமிழ்நாட்டில் பழையனூரில் புகழுடன் வாழ்ந்து வந்தாள். மனிதரைத் தெய்வங்கள் அடக்கி ஆள்வதுபோல், அவள் தெய்வங்களை அடக்கி ஆண்டு வந்தாள். பலாலயத்துக் காளி, தனக்கு நேர்ந்த இன்னலை நீலகேசிக்குச் சொல்லியனுப்பி, அவள் உதவி கோரினாள். நீலகேசியும் தன்னிடம் தோழமை கொண்ட காளியின் துயர் தீர்க்க எண்ணி அப்பணிக்கு ஒருப்பட்டாள்.

பலாலயத்தின் மயானத்தை அடைந்து நீலகேசி, தன் கூளிகளையும், பூதங்களையும், மாய உருக்களையும் ஏவி, முனிவனைச் சூழச் செய்து அச்சுறுத்தினாள். ஆனால் யோக உறக்கம் உறங்கியிருந்த முனிவரை, அவை எதுவும் அசைக்க முடியவில்லை. தன் ஆற்றலால் அடைய முடியாத வெற்றியைச் சூழ்ச்சியால் பெற எண்ணி, அவள் அந்நாட்டரசன் மகளாகிய காமலேகை யுருவில் அழகிய தோற்றம் தாங்கி அவனிடம் சென்றாள். அரசநிலைக்குரிய ஆடையணிகளுடன் அவள் அவனிடம் காதல் நாடகம் நடிக்கத் தொடங்கினாள். முனிவன் முக்கால உணர்வுடையவனாதலால், அவள் முருக் கண்டு நகைத்து “நீ பெண் அல்ல; பழையனூர்க் காளி நீலி என்றறிவேன். நீ விரும்புவது காதலன்று; என் அழிவே. ஆனால் நோன்பு வலிமையுடைய என்னிடம் உன் செயல்கள் எதுவும் ஈடேறாது" என்றான். அவர் யோக வலிவு கண்டு நீலகேசி வியப்படைந்து, அவர் காலில் விழுந்து, தன் தீயெண்ண முழுதும் ஒப்புக்கொண் டாள். மேலும் அவள் தன் மாய ஆற்றலினும் பன்மடங் கு ஆற்றலுடைய அவர் தன்மையைப் பாராட்டித் தன் தீ வழி யினின்றும் தன்னைக் கரையேற்றி நல்வழிப்படுத்துமாறு அவரை வேண்டினள். முனிவர் அவள் பக்குவ நிலையை யறிந்து, சமணநெறியை அறிவித்து அவளுக்கு அறிவு கொளுத்தினார்.

ள்

தன் கோர உருவாலும் செயலாலும் மக்களை அச் சுறுத்திய கொடுங்காளியாகிய நீலகேசி, முனிவர் அரு திறத்தால் தன் இயல்புமுற்றும் மாறினாள். உலக வாழ்வின் தன்மை (சம்சாரம்) இது என்பதையும், இன்ப துன்பங்களின் மூலம், இது என்பதையும், விடுதலை வகையாது என்பதையும்,

து