பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அப்பாத்துரையம் - 28

விரிவாகவும், விளக்கமாகவும் முனிவர் அறவுரையால் அவள் அறிந்து, விளக்கமெய்தினாள்.

"உலகத் தொகுதி (பிரபஞ்சம்) மூன்று பகுதிகளை உடையது. அவை மேல், கீழ், நடு பகுதிகள். கீழ்ப் பகுதி ஒன்றின் கீழ் ஒன்றாக ஏழு உலகங்களை உடையது. இவையே ஏழு நரகங்கள். இவற்றின் கீழே மீளா நரகமாகிய நிகோதம் அமைந்துள்ளது. நிகோதத்தில் சேர்பவர்கள் மீள்வதில்லை. அனால் மற்ற ஏழு நரகங்களிலும் சென்று சேர்பவர்கள் தம் பாவந்தீவினைப் பயன்களை முற்றும் துய்த்தவுடன் மீண்டும் நடு உலகில் வந்து பிறப்பர். இவ்வுலகிலேயே மக்களும் மாக்களும் உண்டு. தொல்காப்பியத்தில் கூறப்பட்ட படி மக்களும் மாக்களும் கிய உயிரினங்கள், ஓரறிவு உயிர்கள் முதலாக ஆறறிவுயி ருறாகப் பல வகைப்படும். நடுவுலகத்திற்கு மேலுள்ள உலகங்கள், தேவருலகத்தின் பாற்படும். இம்முப்பகுதிகளும் சேர்ந்ததே உலகத் தொகுதி (பிரபஞ்சம்)" என்று முனிசந்திரர் விளக்கினார்.

உலகத் தொகுதியில் வாழும் உயிர்கள் பிறந்திறந்து உழல்பவை. அச்சுழற்சியிலிருந்து விடுதலை பெறும் வகை நடு உலக வாழ்வில் மட்டுமே உண்டு. நடுப் பகுதியிலும் சில இடங்களில் மட்டுமே விடுதலைக்கு வேண்டும் நோன்பு, தவம் முதலியவை இயற்றுவதற்கான சூழ்நிலைகள் காணப் படும். இத்தகைய இடங்களையே நன்னிலங்கள் (கர்ம பூமிகள்) என்று கூறுகிறோம். நீலகேசி போன்ற தெய்வங்கள் மேலுலகங்களில் வாழ்பவர்கள். எனவே, அவர்கள் நடு நிலத்து அறவோரை விடத் தாழ்ந்த நிலையையே உடையவர்கள். ஏனெனில், அவர்களைக் கண்டு அஞ்சுபவர்கள் தீயவர்கள் மட்டுமே. எப்பகுதியிலும் நல்லவர்கள், அவர்களைப் பழித்து இழிக்கவே செய்வர். அவர்கள் தம் அடியவர்களை விடுவிப்பதற்கு மாறாக மென்மேலும் அடிமைக் கட்டில் இறுக்கவே உதவுவர்.

விடுதலை பெற வேண்டின், மூன்றே வழிகள் உள அவை அமுதம் போல் அழியா வாழ்வு தரத்தக்கவை. அவை நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகியவை. உலகமுய்யும் படி சஞ்சீவிகளான இந்நெறிகள் அறிவு மயமான வரும் அன்பு மயமானவருமான ஜினபகவானால் அருளப்பட்டவை. இவற்றை