பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீலகேசி

43

மேற்கொண்டவர் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடையவராய், உள மொழி மெய்கள் மூன்றினாலும், எவ்வுயிர்களுக்கும் துன்பம் உண்டுபண்ணா முறையில் வாழ்பவர்.

முனிசந்திரர் கூறிய அருள் நெறியைக் கேட்ட பின் நீலகேசியின் அறிவுக் கண் திறந்து, அதை மூடியிருந்த அறியாமை இருள் அகன்றது. அவள் அருளுருவினனும் அறிவுருவினும் ஆகிய ஜினனையும் அறத்தையும் (ஜினதர்மத் தையும்) பாடிப் பரவினாள். தன் பழைய குருதி வாழ்வை வேம்பென வெறுத்தாள். அதினின்றும் தன்னைக் கரையேற்றி அறிவொளி தந்த குருவினிடமும், தலைவனாகிய ஜினனிடமும், தன் கடமையையும் நன்றியையும் தெரிவிக்கு முறையில், அவள் பல நாடுகளிலும் சமண அறவொளியைப் பரப்புவதென்று உறுதி கொண்டாள்.

பிரிவு (2) குண்டலகேசி வாதம்

ஜின பகவன் கோயிலை வலம் வந்து வணங்கிய பின், நீலகேசி தான் அடைந்த புதிய அற நெறியாகிய சமண சமய நெறியை எங்கும் பரப்பும் எண்ணங் கொண்டவளாய், முதலில் புத்தரிடம் வாதிடுவதென்று தீர்மானித்தாள். இம் முடிவுக்குக் காரணம் புத்த நெறியினர் அக்காலத்தில் ஊனுண்பதை ஆதரித்து ஊக்கியும், உயிர் ஆத்மா இல்லை என்று மறுத்தும், சமயக்கோட்பாடுகளைப் புறக்கணித்தும் வந்ததேயாம். முனிவரிடமிருந்து அவள் பெற்ற அருள் திறத்தால் புத்த நெறி பரப்பி வந்தவர்களுள் சிறந்தவள் குண்டலகேசி என்றறிந்து, அவளிடம் வாதிடச் சென்றாள்.

அச்சமயம் குண்டலகேசி தென் பாஞ்சால நாட்டின தலைமையிடமான காம்பிலி நகரில் வாழ்ந்து வந்தாள். அங்கே சமயப் போருக்கு அனைவரையும் அழைக்கும் அறிகுறியாக ஓர் மரத்தடியில் தருக்குடன் வீற்றிருந்தாள். அவளிடம் வாதிடும் துணிவும் இன்றிப்பணியும் விருப்பும் இன்றி அரசனும் மக்களும் அவள் முன் வாராது ஒதுங்கியிருந்தனர். அவளிடம் கொண்ட அச்சத்தால் நகர் ஒளியிருந்திருந்தது. நீலகேசி வாயில் காப்போன் மூலம் அரசனிடம் குண்டலகேசியின் அழைப்பைத் தான் ஏற்பதாக அறிவித்ததும், அவன் அகமகிழ்ந்து மக்களனை