பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் - 28

வரையும் திரட்டிக்கொண்டு வந்தான். அரசன் நடுவனாயிருந்து சொற்போர் தொடங்குவித்தான்.

குண்டலகேசியின் விருப்பத்திற்கிணங்க வெற்றி தோல்வி களுக்கான பரிசும், ஒறுப்பும் முடிவு செய்யப்பட்டன.

குண்டலகேசியே அவள் தன் சமய உண்மைகளை வரையறுத்துக் கூறும்படி நீலகேசி கேட்க, அவள் கூறத் தொடங்கினாள்.

குண்டலகேசி: எங்கள் சமயத்தின் அடிப்படை உண்மைகள் மரபுரை (ஆப்தம்) தெய்வமொழி (ஆகமம்) பொருள் விளக்கம் (பதார்த்தம்) செயல் (பிரவிருத்தி) ஆகியவை.

எங்கள் சமயத்தின் தலைவர் புத்த பகவான். அவர் பரம் பொருள். உலகின் தொடக்க கால முதலிலிருந்து என்று முள்ளவர். ஊழி பேரூழியாக (கற்ப கற்ப காலமாக) உலக வாழ்வில் புகுந்து வாழ்ந்து தம் நலம் என்ற எண்ணம் சிறிது மின்றி உலகுயிர்களுக்குப் புத்தநெறியை ஊட்டியவர் அவர். அவர் அருளிச் செய்த மூன்று பிடகங்களே (மறைகளே) எங்கள் முதல் நூல்கள்.

நீலகேசி: புத்த பகவான் தொடக்க முதலே முழுநிறை வுடைய பரம் பொருளானால், நூறாயிரம் பேரூழிகளாக அவர் உலகவாழ்வில் ஈடுபட்டுத் திரிவானேன்? தொடக்க முதலே அவர் நிறைவுடையவரானால், அவ்வீடு பாட்டின் பயன்யாது? வாழ்க்கையீடுபாடு, முன்வினையின் பயன் ஆகும்: அவர் ஈடுபாடு எவ்வினையின் பயன்? அது முன்வினையின் பயனானால், அவர் தொடக்கத்திலேயே நிறைவுடையராதல் எவ்வாறு? அவர் தம் நலம்பற்றிய கருத்தேயின்றி, உலக நலத்துக்காகவே இங்ஙனம் ஈடுபட்டார் என்றால், அதை ஏன் தொடராது நிறுத்தினார்? கோடிக் கணக்கான உயிர்களை உலவிட்டுத் தான் மட்டும் வீடு (நிர்வாணம்) பெறுவானேன்.

உயிர்கள் எல்லாவற்றின் நலத்துக்காகவே மூன்று பிடகங்களையும் புத்த பகவான் அருளினார் என்றாய். அப்படி யானால், அவர் ஊனுண்ணலை ஒறுக்காததேன்? மறுக்காத துடன் மட்டுமல்ல, அதற்கு அவர் தூண்டுதலும் ஆதரவும் கூடச் செய்திருக்கிறாரே. ஒழுக்கநெறியின் அடிப்படையாகிய